காதலர் தினத்தில் வெளியாகும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கலை ஒட்டி துணிவு படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான நிலையில் படம் மிகச் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து தாமதமானது.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இதனிடையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் சூட்டிங் அஸர்பைஜானில் துவங்கப்பட்டு முதல் கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு தொடர்ந்து சூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் சென்னைக்கு படக்குழுவினர் திரும்பியுள்ளனர்.

Actor Ajit s Vidaamuyarchi movie first look update

நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான துணிவு படம் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்தது. இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான நிலையில் படம் சூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் துவங்குவதில் தொடர்ந்து தாமதம் காணப்பட்டது. கடந்த மே மாதத்திலேயே இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் படம் தொடர்ந்து தாமதப்பட்டது. இதனிடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டு அசர் பைஜானில் ஷூட்டிங் துவங்கப்பட்டது. அங்கும் தொடர்ந்து பணி மழை உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங்கை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து பட குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள படக் குழுவினர் அடுத்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான வேலைகளில் இயக்குனர் மகிழ் திருமேனி தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாக உள்ள இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அசர் பைஜானில் நடத்தப்பட்ட சூட்டிங்கில் கார் சேசிங், ஆக்சன் காட்சிகள் உள்ளிட்டவை எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

படத்தின் சூட்டிங் துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதத்தின் மத்தியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை ஒட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த நாளில் வெளியாகவில்லை என்றாலும் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் கண்டிப்பாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தடம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள மகிழ் திருமேனி அஜித்துடன் இணைந்துள்ள இந்த விடாமுயற்சி படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. படம் அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய ஏகே 63 படத்திற்காக அஜித் இணைய உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் தன்னை கமிட் செய்யவும் அவர் திட்டமிட்டு வருகிறார். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X