அஜித் 61 படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்!
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை
அந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி இருக்க பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக இருந்தது ஆனால் கொரோனா பரவால் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அஜித்தின் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

ரசிகர்களுக்கு திருவிழா
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் பல கோடி ரூபாய் வசூல் சாதனைகளை செய்து வருகிறது. தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த நடிகர் அஜித் இப்போது அதே பாணியில் ஹெச் வினோத் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளை
சதுரங்கவேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இளம் இயக்குனரான வினோத் இப்பொழுது அஜித்துடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த கூட்டணி முதல் முறையாக நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் இணைந்து இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்ட நேர்கொண்ட பார்வையில் அஜித் குமார் முதல் முறையாக வழக்கறிஞராக நடித்திருந்தார். இந்த படம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றி மிக அழுத்தமாக கூறி இருந்தால் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை பெற்றதோடு பெரும் வசூலையும் செய்தது. இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

2 ஆண்டுகளுக்கும் மேலாக
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் வினோத் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது திரைப்படம் வலிமை. இந்த படம் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாகி உள்ளது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அஜித் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கதாநாயகியாக காலாவில் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க திடீரென கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் தான் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது படக்குழு . எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் வலிமை வெளியாக இருக்க அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது வேகமெடுக்கிறது. நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். இந்த முறையும் சமூக நலன் சார்ந்த பிரச்சினையை வினோத் கையில் எடுத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும் எனவும் மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











