அஜித் 61 படத்தின் தலைப்பு இதுவா?..இணையத்தில் வெளியான தகவல்..குழம்பிய ரசிகர்கள்!

சென்னை : அஜித்தின் 61 திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். தன்னுடைய இயல்பான குணத்தாலும், அட்டகாசமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை, இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளியான திரைப்படமாகும். எச் வினோத் இயக்கிய இந்தபடத்தை போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அஜித் 61

அஜித் 61

நேர்கொண்டபார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்த எச் வினோத்,போனிகபூர் கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து த்ரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

விறுவிறுப்பான ஷூட்டிங்

விறுவிறுப்பான ஷூட்டிங்

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கு தேவையான 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை அடுத்த கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதான் தலைப்பா?

இதுதான் தலைப்பா?

இப்படத்தின் தலைப்பு வல்லமை அல்லது ராபரியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படத்துக்கு 'துணிவே துணை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆனால் இதுவரை படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகததால், ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அஜித் 62

அஜித் 62

அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடித்தகையோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62வது படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கப் பட உள்ளது. அதன் பிறகு அஜித் தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X