என்னது ’நான் கடவுள்’ படத்தில் அஜித் நடிக்க இருந்தாரா?...பேரரசு சொல்லும் புது தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களில் பட டைட்டில்கள் வைப்பதில் இயக்குனர் பேரரசு ஸ்பெஷலிஸ்ட்.

விஜய்க்கு திருப்பதி மற்றும் சிவகாசி என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர்.

இந்த நிலையில் நான் கடவுள் லுக்கில் அப்படியே தன்னுடைய படத்தில் அஜித் நடிப்பதாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பேரரசு தெரிவித்துள்ளார்.

 பிரம்மாண்ட வெற்றி

பிரம்மாண்ட வெற்றி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பேரரசு. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லி என பெயரெடுத்த பேரரசு 2005ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திருப்பாச்சி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. கில்லி படத்திற்கு பிறகு விஜய்க்கு மற்றுமொரு வெற்றி என்றால் அது திருப்பாச்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகவே

சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகவே

பேரரசு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் திருப்பாச்சியில் அண்ணன் - தங்கை பாசத்துடன் சேர்த்து ஆக்ஷனிலும் கலக்கியிருப்பார். திருப்பாச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து உடனடியாக அதே ஆண்டு விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து சிவகாசி என்ற படத்தை இயக்கினார்.

 ஊர்களின் பெயர்களை டைட்டிலாக

ஊர்களின் பெயர்களை டைட்டிலாக

தான் இயக்கும் படங்களுக்கு தமிழ் நாட்டில் புகழ் பெற்ற ஊர்களின் பெயர்களை டைட்டிலாக வைப்பதில் இயக்குனர் பேரரசு ரொம்பவே ஸ்பெஷலிஸ்ட். அந்த வகையில் பேரரசு இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை டைட்டிலாக வைத்துள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் இருக்கும் பேரரசு தான் இயக்கும் படங்கள் அனைத்திற்கும் தானே பாடல்களை எழுதியும் வருகிறார்.

Recommended Video

தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
 நான் கடவுள் லுக்கில்

நான் கடவுள் லுக்கில்

விஜயுடன் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பேரரசு அதைத் தொடர்ந்து இயக்கிய திரைப்படம் திருப்பதி. அஜித் ஹீரோவாக நடித்த இந்த படத்திலும் அனைத்து பாடல்களையும் பேரரசு எழுதியிருந்தார். முந்தைய படங்களை விடவும் அஜித் இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் உடல் எடையை குறைத்தும் நடித்து பட்டைய கிளப்பி இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித்தை வைத்த ஹேர் ஸ்டைல் திருப்பதி படத்திற்காக வைக்கப்பட்டது இல்லை, பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்தார் அதற்காக நீண்ட தலை முடி ஹேர் ஸ்டைலை அஜித் வைத்திருந்தார். நான் கடவுள் படம் தொடங்க இரண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் என்றார்கள் அந்த கேப்பில் எடுக்கப்பட்டதுதான் திருப்பதி என தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குனர் பேரரசு இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X