“AK 61“ பல கெட்டப்புகளில் கலக்கப்போகும் அஜித்... சுவாரஸ்யத்தகவல் !

சென்னை : அஜித் 61 திரைப்படம் குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களைத் தொடர்ந்து அஜித், ஹெச். வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் 61 படத்தில் இணைந்துள்ளனர்.

அஜித் 61 படத்தினை வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் 61

அஜித் 61

அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், அண்ணா சாலையில் இந்த படத்திற்காக செட் போடப்பட்டு தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வங்கியில் கொள்ளை

வங்கியில் கொள்ளை

இந்த வங்கியில் தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்பதும் வங்கி கொள்ளை அடிக்க அஜித் செய்யும் முயற்சியை காவல்துறையினர் தடுத்தார்களா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் கதைக்காக இயக்குனர் எச்.வினோத் பல ஆய்வுகளை செய்து திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல கெட்டப்புகளில்

பல கெட்டப்புகளில்

இந்த படத்தில் அஜித் ஹீரோவாக ஒரு ஒரு கதாபாத்திரத்திலும், வில்லனாக ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சிட்டிஷன் படத்தைப் போல இந்த படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் வருவார் என்று கூறப்படுகிறது. இந்த சுவாரஸ்யத் தகவலால் ரசிகர்கள் மிகவும் குஷியாகி உள்ளனர்.

யார் ஹீரோயின்

யார் ஹீரோயின்

மேலும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய், தபு போன்றவர்கள் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் தவறு என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X