Ajith -Shalini :திருமண நாள் கொண்டாடும் அஜித் -ஷாலினி.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அந்தப்படத்தில் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் இடையில் காதல் தீ பற்றிய நிலையில், திருமணம் செய்துக் கொண்டனர்.

Actor Ajith and Shalini celebrates their 23rd weddning anniversary today

அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

அஜித் -ஷாலினி திருமண நாள் கொண்டாட்டம் : நடிகர் அஜித் கடந்த 30 ஆண்டுகளை கடந்து இந்திய சினிமாவில் தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். காதல் படங்களில் துவங்கிய இவரது பயணம், ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து தற்போது தன்னுடைய வயதிற்கு ஏற்ற படங்களில் சமூக அக்கறையுடன்கூடிய படங்களில் தொடர்ந்து வருகிறது. தனக்கும் பெண்குழந்தை உள்ள நிலையில், காதலிக்க வலியுறுத்தி பெண்ணை டார்ச்சர் செய்யும் கேரக்டர்களில் நடிக்க முடியாத சூழல் உள்ளதாக பேட்டியொன்றில் அஜித் தெரிவித்திருந்தார்.

அமர்க்களம் படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடித்திருந்த அஜித், அவரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து தன்னுடைய படங்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார் அஜித். நல்ல நடிகனாக மட்டுமில்லாமல் நல்ல கணவனாகவும் நல்ல தகப்பனாகவும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் அஜித்.

சமீப காலங்களில் பொது இடங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் ஷாலினி. சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளை காண இவர் தன்னுடைய குழந்தையுடன் வந்திருந்தார். மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கவும் இவர் திரையரங்குகளுக்கு வருகிறார். இவர்களுடன் அஜித் வராதபோதும், ஷாலினியுடன் அவரது குழந்தைகள், அவரது தங்கை ஷாம்லி உள்ளிட்டவர்கள் வருவதை காண முடிகிறது. தன்னுடைய வாழ்க்கையை அவர் சிறப்பாகவே மேற்கொண்டு வருகிறார்.

Actor Ajith and Shalini celebrates their 23rd weddning anniversary today

இந்நிலையில் இன்றைய தினம் அஜித் மற்றும் ஷாலினி தங்களது 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அமர்க்களம் படத்தின்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த ஜோடி ரியல் வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து, 23 ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக தொடர்ந்து வருகின்றனர். அந்த வாழ்க்கைக்கு சான்றாக அவர்களின் குழந்தைகள் காணப்படுகின்றனர். அமர்க்களம் படத்தின் சூட்டிங்கின்போதுதான் இவர்கள் இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். காதலுக்கு உதாரணமாக திகழும் இவர்களுக்கு சமூக வலைதளங்களில் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி, தொடர்ந்து அஜித்துடன் தான் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் இவர்களது புகைப்படங்களால் நிரம்பி வழிகிறது.

Actor Ajith and Shalini celebrates their 23rd weddning anniversary today

ட்விட்டர் பக்கத்திலும் இவர்களது திருமணத்தையொட்டி ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அவர்களது பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து மழையில் நனைய விட்டு வருகின்றனர். இந்த வாழ்த்துக்களில் அண்ணா மற்றும் அண்ணி என அவர்கள் உரிமையுடன் கூப்பிடுவதையும் காண முடிகிறது. 23 ஆண்டுகள் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த வெற்றி வாழ்க்கையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X