Ajith :மகிழ் திருமேனியுடன் லண்டனில் முகாமிட்ட அஜித்.. அப்ப சூட்டிங்?

லண்டன் : நடிகர் அஜித் லீட் கேரக்டரில் நடிக்க விடாமுயற்சி என்ற படம் அவரது ஏகே62 படமாக உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்பிற்கே படக்குழுவினர் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கை துவங்கவும் அதிகமான காலத்தை எடுத்து வருகின்றனர்.

தன்னுடைய பைக் பயணத்தில் மிகவும் பிசியாக இருந்த நடிகர் அஜித், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதையடுத்து அவர் தனது பட வேலைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Ajith and Vidaamuyarchi movie director Magizh thirumeni are in London for pre production works

லண்டனில் மகிழ்திருமேனியுடன் முகாமிட்ட அஜித் : நடிகர் அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ளது விடாமுயற்சி. துணிவு படத்தை தொடர்ந்து இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்தே அதிகமான குழப்பங்கள் காணப்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவரது திரைக்கதையில் போதிய அழுத்தம் இல்லை என்று கூறி, அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் இயக்குநராக தற்போது மகிழ் திருமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவரையும் முறையாக அறிவிக்காமல் படக்குழுவினர் காலம் தாழ்த்தினர். ஆனால் மகிழ் திருமேனி கூறிய கதை, அஜித் மற்றும் லைகாவிற்கு பிடித்ததாகவும் அதனால் அவரை படத்தின் இயக்குநராக தேர்வு செய்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அஜித்தின் பிறந்தநாளையொட்டி கடந்த மே மாதம் 1ம் தேதியே படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பு செய்யப்பட்டது.

Actor Ajith and Vidaamuyarchi movie director Magizh thirumeni are in London for pre production works

படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி தான் இயக்குநர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் உடனடியாக படத்தின் சூட்டிங் துவங்கப்படவில்லை. இதனிடையே, படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க் மற்றும் லொகேஷன்களையும் மகிழ் திருமேனி இறுதி செய்தார். இதனிடையே நேபாளம் உள்ளிட்ட இடங்களில் தன்னுடைய பைக் பயணத்தை மேற்கொண்ட அஜித், வயநாடு உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். அதன் ஏர்போர்ட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது அஜித், மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் லண்டனில் முகாமிட்டுள்ளதாகவும் படம் தொடர்பான வேலைகளில் அவர்கள் பிசியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சில சூட்டிங்குகள் மற்ற நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X