மாஸ்டரில் இடம்பெற்ற அந்த காட்சி.. அடித்துக் கொள்ளும் அஜித் - விஜய் ஃபேன்ஸ்.. போர்க்களமான டிவிட்டர்!

சென்னை: மாஸ்டர் படத்தில் காட்டப்பட்ட ஒரு காட்சியால் டிவிட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்ர தரம் தாழ்ந்து தகாத வார்த்தைகளால் சண்டை போட்டு வருகின்றனர்.

Recommended Video

தலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இருவருமே கோடி கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர்.

ஏதாவது பிரச்சனை என்றால் இரு நடிகர்களின் ரசிகளும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதும், சில நேரங்களில் பாராட்டிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

அடிச்சுக்க ஆள் இல்லை

அடிச்சுக்க ஆள் இல்லை

ஒரு நடிகர் குறித்த ஹேஷ்டேக் ஏதாவது ட்ரென்ட்டானால் உடனே மற்றொரு நடிகரின் ரசிகர்கள் அதனை பீட் செய்வது போல் ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து விடுகின்றனர். இதேபோல் திட்டி நெகட்டிவ் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்வதிலும் இருவரின் ரசிகர்களையும் அடிச்சுக்க ஆள் இல்லை.

ஆர்ட் டிப்பார்ட்மென்ட்

ஆர்ட் டிப்பார்ட்மென்ட்

அந்த வகையில் இன்று நடிகர் விஜய்யை திட்டி ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் ஆர்ட் டிப்பார்ட்மென்ட் செய்த ஒரு காரியம்தான்.

வாலியுடன் பந்தாடுவார்

வாலியுடன் பந்தாடுவார்

அதாவது மாஸ்டர் படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் விஜய் கையில் வாலியுடன் எதிரிகளை பந்தாடுவார். அப்போது, விஜய்க்கு பின்புறம் டிக்கடை செட் போடப்பட்டிருக்கும். அதில் இரண்டு வார இதழ்களின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில் நடிகர் அஜித் குறித்த விஷயம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கால் ஜவ்வு கிழிந்தது

கால் ஜவ்வு கிழிந்தது

அதாவது "அஜித் குதித்தார் கால் ஜவ்வு கிழிந்தது" என்று அச்சிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் வேண்டுமென்றே விஜய் அஜித்தை அசிங்கப்படுத்துவதாக கூறி அவரை கன்னாபின்னாவென திட்டி ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

மேலும் விஜயை திட்டி மீம்ஸையும் வெளியிட்டு வருகின்றனர். விஜய் விக் வைத்திருப்பதாகவும் கிண்டலடித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் அஜித்தை அவரது ரசிகர்களே டேமேஜ் செய்து வருவதாக கூறி வருகின்றனர்.

ஜூம் செய்து பார்த்து

ஜூம் செய்து பார்த்து

மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த திரைப்படம் நேற்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தக் காட்சியை ஜூம் செய்து பார்த்து சண்டை போட்டு வருகின்றனர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X