ரசிகரின் செல்போனை பிடுங்கிய நடிகர் அஜித்.. செம கோபம் போங்க.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகர் அஜித் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபமாக பிடுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

மனைவியுடன் அஜித்
அந்த வகையில் நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் காலையிலேயே வாக்களித்தார். தன்னுடைய வாக்ரகைப் பதிவு செய்வதற்காக வரிசையில் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்றார் அஜித்.

அஜித் கோபம்
அப்போது, ரசிகர் ஒருவர் அஜித்தின் அருகில் நின்று அவருடைய அனுமதியில்லாமல் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கடுப்பான அஜித் ரசிகரின் செல்போனை பிடுங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர் அதிர்ச்சி அடைந்தார்.
செல்பிக்களுக்கு போஸ்
நடிகர் அஜித் கோபப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக எப்போது ரசிகர்கள் கேட்டாலும் சிரித்த முகத்துடன் செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பவர் நடிகர் அஜித்.

மலர்ந்த முகத்துடன்
சமீபத்தில் நடிகர் அஜித் தவறுதலாக கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற போது கூட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டனர். அப்போது மலர்ந்த முகத்துடன் போஸ் கொடுத்து சென்றார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











