புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷடவசமான மரணத்தை கேட்டு வருந்துகிறேன்... நடிகர் அஜித் இரங்கல்!
சென்னை: பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் புனித் ராஜ்குமார். மறைந்த சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் ஆவார்.
6 மாத குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் தோன்றிய புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி ஹீரோ
14 வயதுக்குள்ளேயே 14 படங்களில் நடித்த புனித் ராஜ்குமார், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான புனித் 29 படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

பெரும் சோகம்
இந்நிலையில் நேற்று காலை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் புனித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிட்டான உடலை கொண்ட புனித் ராஜ்குமாரின் இந்த மரணம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாளை இறுதிச்சடங்கு..
அவரது மறைவுக்கு பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாரின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மறைவை கேட்டு இரங்கல்
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் இரங்கல் செய்தியை தெரிவித்து இருக்கிறார். அதில், புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











