தமிழக அரசின் கொரோனா நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய அஜித்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

Recommended Video

முதலமைச்சர் கொரோனா நிதிக்கு 25 லட்சம் வழங்கிய Thala Ajith Kumar

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக மருத்துவம், நிதி என பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

பொது நிவாரண நிதி

பொது நிவாரண நிதி

இந்நிலையில் படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை அதிகரிக்கவும் இந்த திடீர் செலவீனங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அஜித் ரூ.25 லட்சம்

அஜித் ரூ.25 லட்சம்

இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

வங்கி பரிவர்த்தனை

வங்கி பரிவர்த்தனை

வங்கி பரிவர்த்தனை மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் அஜித். இதனை நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஏஆர் முருகதாஸ்

ஏஆர் முருகதாஸ்

ஏற்கனவே நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளனர். இயக்குநர் சிஎஸ் அமுதன் 50 ரூபாயும், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாயும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X