Ajith Kumar: தல தோனிக்காக வந்த தல அஜித்.. உடன் இருக்கும் நம்ம SK.. கண்கொள்ளா காட்சியா இருக்கே!

சென்னை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று சிஎஸ்கே - ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்து வரும் சிஎஸ்கே அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவையே கலக்கி வரும் பிரபல நடிகர் ஒருவர் சிஎஸ்கே விளையாடும் மேட்சை தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்து வரும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.அவரை போன்று பல பிரபலங்களும் கலந்துகொண்டு சென்னை அணிக்கு விசில் அடித்து ஆட்டம் போட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பல லட்சம் மக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள். அதிலும், ஒவ்வொருவருக்கும் பிடித்த அணிகளுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு தமிழகத்தில் பல லட்சம் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளை அனைவரும் விரும்பி பார்க்க காரணம் தோனிதான். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்றே அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - ஹைதராபாத் அணிகளும் மோதுகின்றன.

actor-ajith-enjoying-the-ipl-cricket-match-in-chennai

தல அஜித் தரிசனம்: இந்த போட்டியை காண தமிழ் திரை பிரபலங்களும் குவிந்திருக்கின்றனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் போட்டியை கண்டு ஆரவாரம் செய்து மகிழ்கிறார்கள். இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகர் அஜித் ஐபிஎல் போட்டியை காண வருகை தந்துள்ளார். அவருடன் ஷாலினி மற்றும் மகன், மகளும் வந்துள்ளனர். நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் வந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 2 தல தரிசனத்தை கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். கிரிக்கெட் ஜாம்பவானும், திரையுலக ஜாம்பாவானும் சந்தித்து பேச வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோசமான ஆட்டம்: சென்னை அணி வழக்கம்போல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் முகம் சோர்ந்து போனது. சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சென்னை அணியின் இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்களின் கவனம் முழுவதும் அஜித் பக்கம் திரும்பியிருக்கிறது. இதனால், அஜித்தை வட்டமடித்தபடியே ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் 170 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. உலக அளவில் 200 கோடியை வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் அஜித்தின் வருகையை கண்டு வியந்து ரசித்து வருகிறார்கள். மேலும், அஜித்தின் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அமர்ந்து போட்டியை ரசித்து வருகிறார். இருவரும் சிரித்தபடியே பார்த்து ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor-ajith-enjoying-the-ipl-cricket-match-in-chennai

கல்யாண நாள்: நடிகர் அஜித்தும் - ஷாலினியும் அமர்க்களம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு திருமணம் செய்துகொண்டனர். ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாகவும் இருவரும் உள்ளனர். நடிப்பை தாண்டி பல சாதனைகளை படைத்து வரும் அஜித் குமார் நேற்று தனது திருமண நாளை கொண்டாடினார். அதே வேளையில் தற்போது கிரிக்கெட் போட்டியை குடும்பத்துடன் பார்க்க வந்திருப்பது ஷாலினிக்கு கொடுத்த அன்பு பரிசாகவும் பார்க்கப்படுகிறது.

விபரீதம்: சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் ரிலீஸின் போது நடிகர் அல்லு அர்ஜூன் சென்றதால் களேபரம் ஆனது, இதில் ரசிகை ஒருவர் இறந்ததால் பெரும் சர்ச்சையாக மாறியது. அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அஜித் வருகையால் இதேபோன்ற விபரீதம் நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அஜித்தை காண ரசிகர்கள் குவிந்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அஜித்தை வீடியோவில் காணும் போது ரசிகர்கள் தல தல என்று கத்தை தொடங்கினார்கள். பாகுபலி படத்தில் வரும் சத்தத்தை காட்டிலும் அரங்கம் முழுவதுமே தல என்ற வசனத்தால் அதிர்ந்து போனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X