பசித்தால் எடுத்துக்கொள்.. சைலன்ட்டாக அஜித் ரசிகர்கள் செய்த அந்த காரியம்.. குவியும் பாராட்டு!

சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அஜித் ரசிகர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. இதனால் நாள் தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் அச்சமடைய செய்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

நடிகர்கள் உதவி

நடிகர்கள் உதவி

இதனால் சாலையோரம் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் உதவி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் உதவி

அஜித் ரசிகர்கள் உதவி

அந்த வகையில் லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அஜித் ரசிகர்கள் செய்து வரும் உதவி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது, புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு அஜித் ரசிகர்கள் உணவளித்து வருகின்றனர்.

பசித்தால் எடுத்துக்கொள்

பசித்தால் எடுத்துக்கொள்

பசித்தால் எடுத்துக்கொள் என்ற பேனருடன் தள்ளுவண்டியில் சாப்பாட்டு பொட்டலங்கள் மற்றும் வாழைப்பழங்களை வைத்துள்ளனர். இதனை உணவு தேவைப்படும் மக்கள் மகிழ்ச்சியாக எடுத்து செல்கின்றனர்.

Recommended Video

Valimai படத்தின் புது Update | OTT release! Thala Ajith, Boney Kapoor, H.Vinoth
நெல்லை, குமரியிலும் உதவி

நெல்லை, குமரியிலும் உதவி

அஜித் ரசிகர்களின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் கன்னியாகுமரியிலும் அஜித் ரசிகர்கள் உதவி செய்து வருகின்றனர். திருநெல்வேலியிலும் அஜித் ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: ajith ajith fans அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X