அடடா.. வலிமை டப்பிங்கை முடித்த அஜித்.. படத்தை பார்த்து என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: நடிகர் அஜித் தனது வலிமை படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை.
இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இன்னமும் ரகசியம்
இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதே நேரத்தில் சில நடிகர்களின் பெயர்கள் இன்னமும் ரகசியமாகவே உள்ளது.

வலிமை அப்டேட்
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு ரசிகர்கள் அலுத்தே போய்விட்டனர். இந்நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு தகவல்
தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போனி கபூர், வலிமை படம் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய ஒரு பவர் பேக்டு குடும்பப் படமாக இருக்கும் என்றார். இதனால் ரசிகர்கள் செம ஹேப்பி மோடில் உள்ளனர். இந்நிலையில் வலிமை படம் குறித்த மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

டப்பிங்கை முடித்த அஜித்
அதாவது, நடிகர் அஜித் வலிமை படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் அவுட் கம்மை பார்த்து அஜித், ரொம்பவே ஹேப்பியானதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











