விமானநிலையத்தில் அஜித் செய்த சிறப்பான சம்பவம்.. குவியும் பாராட்டுக்கள்!
சென்னை : நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் 3வது படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் டைட்டில் உள்ளிட்ட எந்த அப்டேட்டும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. படத்தின் சூட்டிங் பூனாவில் நடைபெற்றது.
இதனிடையே சமீபத்தில் சூட்டிங் இடையில் கிடைத்த கேப்பில் இவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் தன்னுடைய பாதையை செதுக்கியவர். அவரது ஆரம்ப கால படங்கள் அவரை மிகவும் அழகாக, காதல் நாயகனாக காட்டியது. தொடர்ந்து அமர்க்களம் போன்ற அதிரடிப் படங்களில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்த அஜித், தற்போது தன்னுடைய வயதிற்கு ஏற்ற படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் சமூக அக்கறை
சமீபகாலங்களில் தன்னுடைய படங்களில் சமூக அக்கறையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். இதையொட்டி இவரது நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் சிறப்பாக அமைந்தன. ஆனால் அவரை பிட்டாக, சிறப்பாக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அவரது சமீபத்திய வலிமை படம் அமைந்தது.

கலவையான விமர்சனங்கள்
இந்தப் படத்தில் பைக் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தாலும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படமும் வசூல்ரீதியாக சூப்பர் ஹிட்டடித்தது. இதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் உறுதி செய்திருந்தார். தொடர்ந்து அஜித்தின் 3வது படத்தை இவர் தற்போது தயாரித்து வருகிறார்.

இறுதிக்கட்ட சூட்டிங்
இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்களுடன் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இடையில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித். தற்போது பூனாவில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அஜித் குறித்த உருவ கேலி
வலிமை படத்தில் இவரது உருவம் குறித்த கேலி எழுந்த நிலையில், தற்போது ஏகே61 படத்திற்காக சிறப்பாக உடலை பிட்டாக்கியுள்ளார் அஜித், இந்நிலையில் தற்போது சென்னை விமானநிலையத்தில் இவரை கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு மறுப்பு சொல்லாமல் அஜித்தும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
Recommended Video

அஜித்தின் சிறப்பான குணம்
தொடர்ந்து சிறிது நேரம் அங்கேயே செலவிட்ட அவர், அங்கிருந்து புறப்படும்போது ரசிகர்களிடம் தான் புறப்படுவதாக கூறி செல்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருடைய இந்த பண்பு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











