இனிமே அஜித்தோட புகைப்படங்கள் வெளியாகாதா.. படக்குழு சொன்ன காரணத்த பாருங்க!

சென்னை : நடிகர் அஜித் வலிமை படத்திற்கு பிறகு தற்போது ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த மாதத்தில் ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித் குமார் -போனி கபூர் மற்றும் ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே61. முன்னதாக நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களில் இந்த கூட்டணி இணைந்திருந்த நிலையில் இரண்டு படங்களும் அஜித் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் ஏகே 61 படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏகே61 படம்

ஏகே61 படம்

ஏகே61 படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு வேடங்களில் அஜித் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு கெட்டப்பில் காதில் கடுக்கண், நீண்ட தாடி சகிதமாக அஜித் காணப்படுகிறார். கண்களில் கூலர்சுடனும் காணப்படுகிறார்.

 இரண்டாவது கெட்டப்

இரண்டாவது கெட்டப்

இந்நிலையில் அவரது அடுத்த கெட்டப் எப்படி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்றும் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் டைட்டில் அடுத்த மாதம் மத்தியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம்

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம்

இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு மற்றும் பேங்க் செட் போடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ள நிலையில் இடையில் சிறிது கேப் எடுத்துக்கொண்டு ஐரோப்பாவில் அஜித் சுற்றுலா மேற்கொண்டார்.

 தினந்தோறும் புகைப்படங்கள்

தினந்தோறும் புகைப்படங்கள்

தினந்தோறும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பைக் ரேஸ் புகைப்படங்கள், கார், பைக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்று அடுத்தடுத்து வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை அவர் ஏற்படுத்தினார். இதனிடையே இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

பூனாவில் அடுத்தக்கட்ட சூட்டிங்

பூனாவில் அடுத்தக்கட்ட சூட்டிங்

இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் பூனாவில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் கலந்துக் கொள்ள உள்ளாராம். இந்த சூட்டிங்கில் அஜித்தின் அடுத்த கெட்டப்புடன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

அஜித்தின் அடுத்த கெட்டப்

இதையடுத்து அவரது இந்த கெட்டப்பின் சீக்ரெட்டை மெயின்டெயின் செய்யவே புனேவில் சூட்டிங் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது கெட்டப்பை மிகவும் சீக்ரெட்டாக வைக்க திட்டமிட்டுள்ளதால், அவரது புகைப்படங்கள் இனிமேல் அடுத்தடுத்து வெளியாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil
காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என்றபோதிலும் தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், இனிமேல் அவரது புகைப்படங்கள் சில வாரங்களுக்கு வெளியாகாது என்ற தகவல் அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X