1000 கோடி கூட்டணிக்கு தயாராகும் அஜித்?.. கேஜிஎஃப் இயக்குநருடன் இணைகிறாரா.. ட்ரெண்டிங்கில் ஏகே64!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இதில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய உள்ள அஜித், வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

இந்த இரு படங்களும் அடுத்தடுத்து சில மாத இடைவெளிகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலும் குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாகவும் வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Ajithkumar Vidaamuyarchi movie Prashanth neel

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ளார். முன்னதாக இந்த படத்தின் அதிகப்படியான ஷூட்டிங் அசர்பைஜானில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் சூட்டிங் சில தினங்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை சில தினங்களில் நிறைவு செய்யவுள்ள அஜித், தொடர்ந்து ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்: கடந்த மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அஜித் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் அடுத்தடுத்து சில மாத இடைவெளிகளில் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. இதனிடையே, இந்த படங்களை தொடர்ந்து அஜித் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.

பிரஷாந்த் நீல் -அஜித் கூட்டணி?: இந்நிலையில் கேஜிஎப் படங்களை இயக்கி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேஜிஎஃப் ஒன் மற்றும் 2 படங்களை இயக்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்த பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சலார் படமும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிலையில் சலார் படத்தின் இரண்டாவது பாகத்திலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் அவர் இணையுள்ளதாகவும் அஜித் -பிரஷாந்த் இருவரும் முன்னதாக இரண்டு முறை சந்தித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்: இந்தப்படம் உருவாக பிரஷாந்த் நீலின் மச்சான் மற்றும் பிரபல கன்னட நடிகர் ஸ்ரீ முரளி பாலமாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பராக உள்ள நிலையில் பிரசாந்த் நீல் மற்றும் அஜித் குமார் காம்பினேஷன் உருவாக இவர்தான் முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்துடன் ஸ்ரீமுரளி இணைந்துள்ள புகைப்படங்களையும் அஜித் -பிரஷாந்த் நீல் காம்பினேஷன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அஜித் ரசிகர்கள் 1000 கோடி ரூபாய் படம் உருவாகவுள்ளதாக தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் ஏகே64: மேலும் கேஜிஎஃப் இயக்குனருடன் அஜித் இணைந்தால் அந்த படம் எப்படிப்பட்ட படமாக அமையும் என்பது குறித்தும் கனவு காண ஆரம்பித்துள்ளனர். இந்தப் படத்தை ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஏகே 64 என்ற ஹேஷ்டேக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X