Vetri maaran: அஜித்திடம் கதை சொல்லி ஓகே செய்த வெற்றிமாறன்.. ஏகே64ல் இணையும் கூட்டணி!
சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்தக்கட்ட சூட்டிங் துபாயில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்திற்காக அஜித் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த 3 படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூலில் சிறப்பாக அமைந்தது. இதனிடையே கடந்த ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாக துணிவு படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆனது.
துணிவு படம்: இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியானது. படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ஏகே62 படத்தை உடனடியாக துவங்கி தீபாவளி ரிலீசாக அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த மே மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மாதத்தில்தான் சூட்டிங் துவங்கப்பட்டது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங்: இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்டு கடந்த சில வாரங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த முதல்கட்ட சூட்டிங்கை நிறைவு செய்துள்ள படக்குழுவினர் தற்போது சென்னை துவங்கியுள்ளனர். இரண்டாவது கட்டமாக இந்தப் படத்தின் சூட்டிங் துபாயில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய இயக்குநர் மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆதிக்குடன் அஜித் கூட்டணி: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது ஏகே63 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை அஜித்தின் மேனேஜரும் உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தை ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தற்போது தயாரிக்கவுள்ளனர். இந்நிலையில் எல்ரெட் குமார் அடுத்ததாக அஜித்தை வைத்து ஏகே64 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறனுடன் இணையும் அஜித்: இதற்கான கதையை அஜித்திடம் கூறி வெற்றிமாறன் ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் இணைவாரா அல்லது அஜித்தின் ஏகே63 படத்தில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











