விஜய் பிறந்தநாளில் அடித்து தூக்கிய அஜித்.. ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளில் நடிகர் அஜித்தின் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாக பார்க்கப்படுவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ இவர்களின் ரசிகர்களுக்குள் பெரும் போட்டி காலங் காலமாய் உள்ளது.
இருவரில் யாராவது ஒருவரின் ஏதாவது ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டானால் போதும் உடனே அடுத்தவரின் ரசிகர்களுக்கு மூக்குமேல் வேர்த்துவிடும். போட்டியாக பல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

பிறந்தநாள்
விஜய் ரசிகர்கள் என்றாலும் சரி அஜித் ரசிகர்கள் என்றாலும் சரி இதுதான் வாடிக்கை. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ் சினிமாவை சேர்நத் திரை பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சில வாரங்களாக
அவரது பிறந்த நாளை முன்னிட்டு சமூகவலைதளங்களில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. கடந்த சில வாரங்களாகவே விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் களைக்கட்ட தொடங்கியது.

ட்ரெண்டிங்
நேற்று இரவு முதலே HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர் ரசிகர்கள். தொடர்ந்து #HappyBirthdayVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர். இந்த ஹேஷ்டேக் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்தது.

அஜித் ஹேஷ்டேக்
இதனைத் தொடர்ந்து கோதாவில் குதித்த அஜித் ரசிகர்கள் #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் சுமார் 2 மில்லியன் டிவிட்டுகளை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளது. விஜய் பிறந்தநாளில் அஜித்தின் ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











