கொரோனாவால் திரும்ப முடியவில்லை... கனடாவில் இருக்கும் மகன் பற்றி விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்!

By

சென்னை: கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி, நடிகர் அஜித் நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Wow! விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்| Jason Sanjay | Lock Down

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர், சினிமா தொடர்பான படிப்புக்காக கனடா நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் படித்து வருகிறார்.

ஊரடங்கு

ஊரடங்கு

இதற்கிடையே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அங்கு ஏராளமானோர் தினமும் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து

போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் சிக்கியுள்ள பலர், தங்கள் சொந்த நாட்டுக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர். படிப்புக்காக வெளிநாடு சென்றவர்களும் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக வசித்து வருகின்றனர்.

விஜய் மகன் சஞ்சய்

விஜய் மகன் சஞ்சய்

இந்நிலையில் நடிகர் விஜய், தனது மகன் குறித்து கவலை அடைந்ததாகவும் இதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், அவர் தரப்பில் இதை மறுத்திருந்தனர். சஞ்சய், பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் நடிகர் விஜய், அவரிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

விசாரித்த அஜித்

விசாரித்த அஜித்

இந்த தகவல் பரவியதும் இதுபற்றி அறிந்த அஜித், நடிகர் விஜய்யிடம் போனில் விசாரித்துள்ளார். சஞ்சய்யின் நலம் குறித்தும் கனடாவில் தற்போது இருக்கும் சூழல் பற்றியும் அவர் விசாரித்ததாகவும் அதற்கு விஜய் பதிலளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யும் அஜித்தும் நேரம் கிடைக்கும்போது போனில் பேசிக்கொள்வது சஜகமான ஒன்றுதான் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X