அஜித்தின் மகளா இது..எவ்வளவு மடமடன்னு வளர்ந்துட்டாங்க பார்த்தீர்களா?இணையத்தில் கலக்கும் புகைப்படம்!
சென்னை: நடிகர் அஜித்தின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர்,டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டிரைலரைப்பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் படத்தைப்பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு என தனி ஸ்டைல், தனி பாணியை வைத்து இருக்கிறார் . பட விளம்பரம், பொது நிகழ்ச்சி என எதிலிலும் கலந்து கொள்ளாத அஜித்தின் ஒரு புகைப்படம் வெளியானாலே அது டிரெண்டாகி விடுகிறது. எந்த சமூகவலைத்தளத்திலும் அஜித் இல்லை. இதே போல அவரது மனைவி ஷாலினியும் எந்த சோஷியல் மீடியாவில் இல்லாத நிலையில், சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார்.

குடும்ப புகைப்படம்
இந்நிலையில்,ஷாலினி புத்தாண்டை முன்னிட்டு குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற போது அந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் அஜித்,ஷாலினி, அஜித்தின் மகள் அனோஷ்கா மகன் ஆத்விக் ஆகியோர் உள்ளனர்.

அட என்ன அழகு
அஜித்தின் மகள் அனோஷ்கான தனது அப்பா உயரத்திற்கு மடமடன்னு வளர்ந்து கதாநாயகிகளுக்கு சவால்விடும் வகையில் செம க்யூட்டாக இருக்கிறார். இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் அப்பாவின் கலரு, அம்மாவின் அழகு என இரண்டும் கலந்து அழகான தேவதை என ரசிகர்கள் அஜித்தின் மகளை புகழ்ந்து வருகின்றனர்.

க்யூட் கப்பில்
நடிகர் அஜித், காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக நட்சத்திர நடிகர் என்று பெயர் எடுத்தார். 1999ம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, குடும்பத்தினரின் சம்பதத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் 23 ஆண்டுகள் கடந்த போதும் இன்றும் இவர்கள் அனைவருக்கும் பிடித்த க்யூட் கப்பிலாகவே உள்ளனர்.


Click it and Unblock the Notifications











