அஜித்துக்கு பிறந்தநாள்! “மை நேம் இஸ் பில்லா” பாடல் உருவான சோக கதை! அட பாவமே யுவன் இப்படியா பண்ணினாரு
சென்னை : மே 1 ஆம் தேதியான இன்று உழைக்கும் வர்க்கத்தினர் உழைப்பாளர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாலும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அஜித் நடிப்பில் வெளியான "தீனா" திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் ரசிகர்கள் சரவெடி வெடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சியின் அப்டேட்டுக்காக ஒரு பக்கத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அஜித் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டடித்த பில்லா திரைப்படத்தில் அவருக்கு மாஸாக அமைந்த "மை நேம் இஸ் பில்லா" பாடல் எப்படி உருவானது என்பது பற்றி பார்க்கலாம்.

நடிகர் அஜித்குமாருக்கு காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி போன்ற பல திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுத்த பிறகு ஒரு சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போயிருந்த நேரத்தில் நடிகர் ரஜினி அஜித்திடம் வேண்டுமென்றால் பில்லா படத்தில் ரீமேக்கில் நீங்கள் நடித்துப்பாருங்கள் என்று சொல்ல, ஐடியா அஜித்துக்கு பெரிய அளவில் பென்ச் மார்க் கிரியேட்டை கொடுத்து இருந்தது.
அஜித்தின் ஸ்டைலான ஸ்வாக் பில்லா படத்தில் வொர்க் அவுட் ஆனது. அதுவரைக்கும் பெரிய அளவில் பில்டப் இல்லாமல் நடித்த அஜித் "பில்லா" படத்திற்கு பிறகு ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருந்தார். 2007 ஆம் ஆண்டு ரிலீசான பில்லா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதுவும் ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் என்பதால் ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரும் அஜித்தை இந்த படத்திற்கு பிறகு கொண்டாட ஆரம்பித்தனர்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் பில்லா படம் வெளியானது. அதேபோல அஜித்துக்கு இந்த திரைப்படம் எவ்வளவு மாஸ் ஆக அமைந்திருந்ததோ அதுபோல நடிகை நயன்தாராவிற்கும் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நமீதா நடித்திருப்பார்கள். கூடவே பிரபு, ரகுமான், சந்தானம் போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தின் மூலம் தான் நயன்தாரா முதல்முறையாக பிகினி உடையில் நடித்திருந்தார். அதிலும் மாடியில் இருந்து காருக்கு ஜம்பாகும் நயன்தாராவின் ஸ்டில்ஸ் வேற லெவலில் பிரபலமானது. அது பற்றி ஒரு பேட்டியில் பேசிய விஷ்ணுவரதன், "நயன் பக்கா சவுத் இந்தியன் ஹோம்லி லுக்கில் இருக்கக்கூடிய நடிகை. அவரை இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்று நினைத்துதான் அவரை பில்லாவில் வித்தியாசமான லுக்கில் நடிக்க வைத்தேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்தது அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "மை நேம் இஸ் பில்லா" பாடல் தான். ஆனால் அந்த பாடல் உருவான விதம் தான் பலரையும் வியக்க வைத்து இருக்கிறது. அதாவது நாளைக்கு பாடலுக்கான படபிடிப்பு என்றால் அதற்கான செட்டெல்லாம் போட்டு விட்டார்களாம். ஆனால் யுவன் அதுவரை பாடலை கொடுக்கவே இல்லையாம்.
விஷ்ணுவர்தன் என்ன ஆச்சு யுவன்? இன்னும் பாடல் கொடுக்கல என்று கேட்க, அதற்கு யுவன் "இதோ வந்துடும்" என்று சொல்லியே கடைசி வரை பாடலை கொடுக்கவே இல்லையாம். அதனால் அந்த பாடல் இல்லாமலேயே அந்த பாடல் காட்சியை விஷ்ணு படமாக்கினாராம். இதற்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் எப்படி மியூசிக் இல்லாமல் டான்ஸ் ஆட வைப்பது என்று கேட்டிருக்கிறார்.
ஆனாலும் விஷ்ணு அவருக்கு தேவையான ஸ்டைலை மியூசிக் இல்லாமல் அஜித்தை வைத்து எடுத்து விட்டாராம். அதற்குப் பிறகு யுவன் பிட்டு பிட்டாக பாட்டை அனுப்பி இருக்கிறார். இதை பார்த்த அஜித் என்ன விஷ்ணு இது? என்று கேட்க, அதற்கு விஷ்ணு சார் இன்னும் பாடல் ரெடி ஆகல என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அஜித் சரி ஓகே பரவாயில்லை என்று சொல்லிவிட்டாராம். இப்படியே பிட்டு பிட்டாக அந்த பாடல் காட்சியை படமாக்கினார்களாம். ஆனால் திரையில் பார்க்கும்போதுதான் அந்த பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











