ரேஸின் போது அஜித் கார் திடீர் விபத்து.. வெடித்த டயர்.. பதறிய ரசிகர்கள்!

சென்னை: நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஸின் போது, கார் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட அஜித்தின் ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர்.

கார் ரேஸில் கவனம் செலுத்தி நடிகர் அஜித் 'அஜித் ரேஸிங்' என்ற அணியை கடந்த ஆண்டு உருவாக்கினார். இதைத்தொடர்ந்து துபாயில் நடந்த ரேஸில் ''அஜித்குமார் ரேஸிங்'' அணி மூன்றாவது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, இத்தாலியில் நடைபெற்ற, Mugello சர்கியூட்டில் நடந்த 12H ரேஸில், அஜித் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்தது. வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடி உடன் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலானது.

ajith kumar car race

விபத்தில் சிக்கிய கார்: தற்போது அஜித்குமார் ரேலிங் அணி, ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. மே 17ந் தேதியான நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று இந்திய நேரப்படி மதியம் 3:40 மணிக்கு தொடங்கியது. இதில் நடிகர் அஜித்குமார் போர்ஷியா அணி சார்பில் பங்கேற்றார். அப்போது, அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

குட் பேட் அக்லி: அஜித் நடித்த துணிவு படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் எந்த படமும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 10ந் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ''குட் பேட் அக்லி'' படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தில், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா, சிம்ரன், பிரியங்கா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கேங்ஸ்டர் திரைப்படமான இப்படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் உடல் உடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் வந்து, தனது ரசிகர்களை மகிழ்வித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X