Ajith - ஏகே 62 தாமதம்.. முழுசாகவே அஜித் மாறிட்டாரே - ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Ajith (அஜித்) ஏகே 62 படத்தின் அறிவிப்பும், ஷூட்டிங்கும் தொடர்ந்து தாமதமாகும் சூழலில் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது.

அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். வாரிசு படத்துடன் போட்டிப்போட்டு களமிறங்கிய துணிவு சூப்பர் ஹிட்டடித்தது. இதனால் அஜித் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் அஜித் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட வைத்தார்.

Actor Ajith Kumar Cooking Video Is Gone Trend on Social Media

விக்கி அவுட்; மகிழ் இன்: அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென விலக மகிழ் திருமேனி படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். அவர்தான் இயக்குநர் என்பது உறுதியானாலும் அதுதொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அறிவிக்காமல் இருக்கிறது படத்தை தயாரிக்கும் லைகா. இதனால் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

எப்போது அறிவிப்பு: மகிழ் திருமேனி படத்தின் கதையை உருவாக்கும் பணியில் இப்போது இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சில கொரியன் படங்களை ரீமேக் செய்யலாம் என அஜித் அவருக்கு அறிவுறுத்தியதாகவும் அதனால் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது கொரியன் கதைக்கு பதிலாக தனது கதையையே மகிழ் திருமேனி பட்டை தீட்டிவருகிறார்.

Actor Ajith Kumar Cooking Video Is Gone Trend on Social Media

இது அஜித்தின் கரியரில் பக்கா ஆக்‌ஷன் படமாக அமையும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியாகலாம் என கருதப்படுகிறது.

டூருக்கு சென்ற அஜித்: இதற்கிடையே அஜித் பைக்கில் உலகத்தை சுற்றும் பரஸ்பர மரியாதை பயணத்துக்கு திட்டமிட்டிருந்தார். இருப்பினும் ஏகே 62 படத்தை முடித்துவிட்டு அந்தப் பயணத்தை அவர் தொடங்கலாம் என நினைத்திருந்தாராம். ஆனால் கதை இறுதி வடிவம் பெறுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதால் பரஸ்பர மரியாதை பயணத்தின் முதல்கட்டத்தை முடிக்க திட்டமிட்டு அவர் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

Actor Ajith Kumar Cooking Video Is Gone Trend on Social Media

ட்ரெண்டாகும் வீடியோ: அதன்படி அவர் தனது முதல் கட்ட பயணத்தில் இப்போது திபெத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டரில் அஜித் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. தனது சுற்றுப்பயணத்தின் இடையே நேபாளத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்ற அவர் அங்கு செஃப் உடையை போட்டுக்கொண்டு சமைத்துக்கொண்டிருக்கிறார்.

சமையலில் கெட்டிக்காரர்: பொதுவாகவே அஜித் சமைப்பதில் பெரிதும் ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது. தனது படத்தின் ஷூட்டிங்போது பலமுறை பட யூனிட்டுக்கு சமைத்துப்போட்டிருக்கிறார். குறிப்பாக அவர் செய்யும் பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும் அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் கூறியிருக்கின்றனர். தற்போது இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் ஏகே முழு சமையற்காரராக மாறிவிட்டாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X