போனிகபூருக்கு அஜித் கொடுத்த நம்பிக்கை.. அப்படி என்னதான் சொன்னாரு!
சென்னை : நடிகர் அஜித்குமார், ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் துணிவு.
இந்தப் படம் இன்னும் சில தினங்களில் பொங்கல் ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது. படம் கண்டிப்பாக சிறப்பான வெற்றியை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ளது துணிவு படம். இவர்களது கூட்டணியில் முன்னதாக உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது துணிவு படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் பொங்கல் ரிலீசாக இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பான ட்ரெயிலர்
படத்தின் ட்ரெயிலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களையும் பெற்றுள்ளது. முன்னதாக விஜய் படத்தின் பீஸ்ட் படத்தின் சாதனையையும் இந்த ட்ரெயிலர் முறியடித்துள்ளது. வலிமை படத்தைப் போலவே இந்த படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பதை துணிவு ட்ரெய்லரின் மூலம் அறிய முடிகிறது. படத்தில் நாயகி மஞ்சு வாரியருக்கும் சிறப்பான பல ஆக்ஷன் காட்சிகள் அமைந்துள்ளது இந்த ட்ரெய்லரின் மூலம் அறிய முடிகிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக முன்னதாக தயாரிப்பு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் இந்த ட்ரெய்லர் பலவிதமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

விமர்சனங்களை பெற்ற ட்ரெயிலர்
படம் முன்னதாக வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தின் சில காட்சிகளை ஒத்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆயினும் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அஜித்தின் முந்தைய படமான வலிமை கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் துணிவு படம் அந்த விமர்சனங்களில் இருந்து தப்பித்து சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்புகள் வேண்டாம்
இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இருவித கெட்டப்புகளில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் மங்காத்தா, பில்லா போன்ற படங்களின் மற்றொரு வடிவமாக வெளியாகும் என்று யூகிக்கப்படும் நிலையில் அஜித்தின் மற்றொரு பரிணாமத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் முந்தைய படங்களின் எதிர்பார்ப்புகளுடன் இந்த படத்தை பார்க்க வர வேண்டாம் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மங்காத்தா அஜித், பில்லா அஜித் போன்ற கேரக்டர்களை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் துணிவு அஜித்தை மட்டுமே இந்த படத்தில் பார்க்க முடியும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அஜித் நம்பிக்கை
இதனிடையே இந்த படத்தை பற்றி அஜித் போனி கபூருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படம் மோத உள்ள நிலையில் இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று போனி கபூருக்கு அஜித் உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எப்போதுமே தனிமை விரும்பியான அஜித் இந்த படத்திற்கு முன்னதாக பல்வேறு விதமான போஸ்டர்கள் மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பிக்களையும் வெளியிட்டதை காண முடிந்தது. இவை அனைத்தும் துணிவு படத்திற்கு சிறந்த சிறப்பான விளம்பரமாக அமைந்தது. இதனிடையே அஜித் கூறியது போல இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











