Ajith: துபாயில் இருந்து சென்னை திரும்பிய அஜித்.. நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!
சென்னை: கார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக துபாயில் தங்கியிருந்தார் நடிகர் அஜித்குமார். இஸ்ரேல் - ஈரான் போர் வெடித்த நிலையில் துபாய் உள்ளிட்ட பல இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் தற்போது அஜித் சென்னை திரும்பி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் அஜித்குமார், ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். துபாயில் நடக்கும் சர்வதேச கார் ரேஸில், தனது அணியுடன் பல போட்டிகளில் கலந்து கொண்டார். துபாயில் இருந்த அஜித்குமாருடன் சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்த புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
நடிகர் அஜித்குமார்: இதைடுத்து, பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இஸ்ரேல் - ஈரான் போர் வெடித்த நிலையில் துபாய் உள்ளிட்ட பல இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் துபாயில் இருக்கும் அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா என ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்குமார் துபாயில் பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. சென்னை திரும்ப அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வரமுடியாமல் போனது. தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் தங்கி இருப்பதாக சொல்லப்பட்டது.

சென்னை திரும்பினார்: இந்நிலையில், தற்போது அஜித் துபாயில் இருந்து சற்று முன் சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் காரில் அவர் பொருட்களை ஏற்றி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த அஜித்தின் ரசிகர்கள் நிம்மதி அடைந்து அப்பாடா... அஜித் பாதுகாப்பாக வந்துவிட்டார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அஜித், மார்ச் 1ம் தேதி துபாயில் இருந்து சென்னை வருவதாக இருந்தது. ஆனால், ஈரானியத் தலைவர் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து துபாய் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அஜித் சென்னை திரும்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











