Ajith kumar: அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைட் வீடியோ.. இப்ப எங்க இருக்காரு தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இந்த மாதத்தின் இறுதியில் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக தற்போது வெளிநாட்டில்தான் அஜித் உள்ளார். அங்கேயே தன்னுடைய சொந்த வீட்டில் தங்கி இந்த சூட்டிங்கில் அவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டத்தையொட்டி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமன் நாட்டில் நடிகர் அஜித்தின் பைக் ரைட் வீடியோ: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் அஜித்திற்கு ஜோடி இல்லாத நிலையில், மஞ்சு வாரியர் படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த மே மாதம் அவரது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது.

விடாமுயற்சி படம் கடந்த மார்ச் மாதத்திலேயே சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போதுவரை இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்படாமல் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டத்திற்கு படம் திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி டைரக்ஷனில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துபாயில் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளன. ஒரே கட்டமாக படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தன்னுடைய உலக பைக் ரைடிற்கான வேலைகளிலும் அஜித் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

விடாமுயற்சிக்காக துபாய் சென்றுள்ள அஜித், ஓமன் நாட்டில் தற்போது உள்ளார். அங்கு பைக் ரைடை தற்போது மேற்கொண்டுள்ளார். அவர் ரசிகர் ஒருவருடன் உரையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மாத இறுதியில்தான் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அஜித் ஓமன் நாட்டில் தன்னுடைய பைக் டூரை மேற்கொண்டுள்ளார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய விருப்பமான பைக் டூரையும் அவர் விடாமல் தொடர்ந்து வருகிறார். அவரது படத்தின் டைட்டிலை போலவே அவரது சொந்த வாழ்க்கையிலும் அவரது விடாமுயற்சி தொடர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











