நேர் கொண்ட பார்வை தல அஜீத்தால் மட்டுமே இது சாத்தியம் - இயக்குநர் சுசீந்திரன்

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் அஜீத்தை பாராட்டி வரும் நிலையில் இயக்குநர் சுசீந்திரன், இந்தப் படத்தை பார்த்துவிட்டு, அஜீத்தால் மட்டுமே இது சாத்தியம் என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கி நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரிங், வித்யா பாலன், டெல்லி கணேஷ், சுஜித் ஷங்கர், ஜூனியர் பாலையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Actor Ajith Kumar only can do this-Director Suseenthiran

இந்த திரைப்படம் ஹிந்தி திரைப்படமான பிங்க் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட திரைக்கதை ஆகும். இயக்குனர் எச்.வினோத்தின் முந்தைய திரைப்படமான சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பொழுது இயக்குனர் ஹச்.வினோத் இயக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம் பெண்களுக்கு நடக்கும் அநீதியை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். கத்தி மேல் நடப்பதைப் போன்று மிக ஜாக்கிரதையாகவும், ஆபாசமில்லாமலும் மிக நேர்த்தியாக கையாண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Actor Ajith Kumar only can do this-Director Suseenthiran

நடிகர் சூர்யா இரண்டு தினங்களுக்கு முன் இந்தப் படத்தை பார்த்துவிட்டு அஜீத் குமாரை, மக்கள் மனசுல அவர் எப்பவும் ஒரு மாஸ் ஹீரோ தான் என்று வானளாவ புகழ்ந்து பாராட்டுக் கடிதம் எழுதியதோடு, கூடவே பொக்கேவும் கொடுத்து அனுப்பியிருந்தார்.

தற்போது வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரனும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைப் பார்த்து விட்டு, நேர்கொண்ட பார்வை ஒரு நல்ல திரைப்படம். இந்தமாதிரி திரைப்படத்தை எடுக்க ஒரு தைரியமும், நல்ல எண்ணமும் வேண்டும்.

நடிகர் அஜித் குமாரால் மட்டுமே இந்த திரைப்படம் சாத்தியமானது, என் மனமார்ந்த நன்றி. வாலி, வரலாறு திரைப்படங்களை போல இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பை நடிகர் அஜித் குமார் வெளிப்படித்தியுள்ளார். ரங்கராஜ் பாண்டேவின் காப்பாத்திரமும் நடிப்பும் நன்றாக இருந்தது.

இந்த திரைப்படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. இயக்குனர் எச்.வினோத் மீண்டும் ஒரு வெற்றி திரைப்படம் கொடுத்துள்ளார் என்றும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X