அஜித்தின் அடுத்த பைக் ரைட் வீடியோ.. என்ன வேகம்.. ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை : நடிகர் அஜித் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் 3வது முறையாக நடித்து வரும் அஜித், விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை முடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் தலைப்புகூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், போனிகபூர் என்ன ஐடியாவில் உள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித் தற்போது தன்னுடைய ஏகே61 படத்தின் சூட்டிங்கில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதிக நாட்கள் நடைபெற்ற நிலையில், இடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித்.

லண்டன் பயணம்

லண்டன் பயணம்

இந்த பயணத்தின்போது அவரை அதிகமான பைக் ரைட்களில் காண முடிந்தது. இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அஜித், அடுத்தக்கட்ட சூட்டிங்கிலும் பங்கேற்றார்.

விசாகப்பட்டினம் சூட்டிங்

விசாகப்பட்டினம் சூட்டிங்

பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்திலும் நடந்துள்ளது.

பைக் ரைட் ஆர்வம்

பைக் ரைட் ஆர்வம்

தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. எப்போதுமே பைக் ரைடில் ஆர்வம் கொண்டவர் அஜித். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதன் பந்தயங்களில் அவர் கலந்துக் கொள்வார். சமீபத்தில் வெளியான இவரது வலிமை படத்திலும் பைக் ரைட் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றன.

பைக் ரைட் செய்த அஜித்

பைக் ரைட் செய்த அஜித்

இந்நிலையில் தற்போது அஜித் பைக் ரைட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வீடியோவில் அஜித் தன்னுடைய ரைடில் அதிகமான வேகத்தை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சீனியர்களுடன் புகைப்படம்

சீனியர்களுடன் புகைப்படம்

மேலும் தன்னுடைய சீனியர் ரைடர்ஸ் மற்றும் பயிற்சியாளர்களுடனும் அஜித் போஸ் கொடுத்துள்ளார். எவ்வளவுதான் சினிமாவில் பிசியான நடிகராக இருந்தாலும் பைக் ரைடில் தன்னுடைய விருப்பத்தை அஜித் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் உள்ளார். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X