மங்காத்தா படத்தோட மேக்கிங் வீடியோ.. அஜித் கையில் என்ன இருக்கு தெரியுமா?
சென்னை : அஜித் -வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது மங்காத்தா படம்.
இந்தப் படத்தில் அஜித்தை மிகவும் ஸ்டைலாக வெளிப்படுத்தி அவரது ரசிகர்களை கவர்ந்திருந்தார் வெங்கட் பிரபு.
யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது. படம் வசூல் மழை பொழிந்தது.

மங்காத்தா படம்
நடிகர் அஜித்தின் கேரியரில் பெஸ்டாக அமைந்த படங்களில் மங்காத்தாவிற்கு மிகப்பெரிய இடம் உண்டு. வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் அஜித் ரசிகர்களின் பேவரிட் லிஸ்ட்டில் அமைந்தது. படம் சிறப்பான விமர்சனங்களையும் அதிகமான வசூலையும் பெற்றது.

ஜாலியான பாடல்கள்
இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாகியிருந்தார் த்ரிஷா. மேலும் அர்ஜுன், த்ரிஷா, ஆன்ட்ரியா, ராய் லட்சுமி, அஞ்சலி, பிரேம்ஜி என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் படம் மிகப்பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தது. ஜாலியான பாடல்கள் முதல், மெலடி வரை படத்தில் சிறப்பான பாடல்கள் அமைந்தன.

நெகட்டிவ் ரோலில் அஜித்
இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் அஜித் நடித்திருந்தார். படத்தின் நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கறது என்று அஜித் பேசிய டயலாக், ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட். இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த நிலையில் மங்காத்தா 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது.

மேக்கிங் வீடியோ
இதனிடையே 12 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது மங்காத்தா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஸ்டைலான அஜித் பார்க்க முடிகிறது. மேலும் இந்த வீடியோவில் மிகவும் உற்சாகமாக அவர் காணப்படுகிறது. மிகப்பெரிய கேமராவை வைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுக்கிறார்.

சண்டை காட்சிகளில் அஜித்
மேலும் பிரேம்ஜி உள்ளிட்டவர்களின் அலப்பறைகளையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ஸ்டண்ட் சில்வா மேற்பார்வையில் அஜித் சண்டை காட்சிகளில் ஈடுபடுகிறார். மொத்தத்தில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியானாலும் ரசிகர்களை இந்த வீடியோ வெகுவாக கவர்ந்துள்ளது.

துணிவு படத்தில் நெகட்டிவ் ரோல்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ளது துணிவு படம். இந்தப் படத்திலும் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மங்காத்தா படத்தில் அஜித்தின் நெகட்டிவ் ரோல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது துணிவு படமும் அதேபோன்ற அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











