சீண்டுனா சிரிப்பவர்..இணையத்தை அலறவிடும் துணிவு ‘கேங்ஸ்டா‘ பாடல்!

சென்னை : துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியாகி உள்ளது. மிரட்டலான பாடல் வரியுடன் கூடிய இந்த பாடலை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், கேங்ஸ்டா பாடலின் வரிகளை ட்விட்டரில் பதிவிட்டு டிசம்பர் 25ந் தேதி வெளியாகும் என ஏற்கனவே பகிர்ந்து இருந்தார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் இணைந்து இருக்கிறார்.

துணிவு

துணிவு

துணிவு படத்தில் அஜித்துடன் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும்,சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ஜோடியான அமீர் மற்றும் பாவனி இருவரும் துணிவு படத்தில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இப்படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படப்பிடிப்பிற்கு இடையே அஜித் பைக் ரைடில் கலந்து கொண்டு பின் தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படத்தின் கதை

படத்தின் கதை

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை பஞ்சாப்பில் 1987ம் ஆண்டு நடந்த வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் கதை வங்கி கொள்ளையை பற்றிதான் ஆனால்,1987ம் ஆண்டு நடந்த கொள்ளை பற்றியது இல்லை என எச் வினோத் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

துணிவு படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதால், மீண்டும் ஒரு மங்காத்தா அஜித்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

3வது பாடல்

3வது பாடல்

துணிவு படத்தின் முதல் இரண்டு பாடல்களான சில்லா சில்லா மற்றும் காசேதன் கடவுளடா ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பாடகர் ஷபீர் சுல்தான் பாடியுள்ளார். சீண்டினா சிரிப்பவன்...சுயவழி நடப்பவன்..சரித்திரம் படைப்பவன் கேங்ஸ்டா என பாடல் வரி அஜித் ரசிகர்களை சும்மா மிரளவிட்டுள்ளது. இப்பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X