சென்னை திரும்பிய அஜித்.. அப்போ ஏகே 62 அப்டேட் சீக்கிரம் வந்துடும் போல.. குஷியான ரசிகர்கள்!

சென்னை: போர்ச்சுகல் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு டூர் சென்று வந்த நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பியதாக அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த மாதம் 1, 2, 3 தேதிகளில் விஜய்யின் லியோ படத்தின் அதிரடியான அப்டேட்கள் வெளியாகி அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 6ம் தேதி ஏகே 62 படத்தின் இயக்குநர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்திய துணிவு

அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்திய துணிவு

வலிமை படத்தை பார்த்து அப்செட்டான அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பக்கா மாஸ் படமாக அமைந்தது. படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகளை எல்லாம் மறந்து விட்டு அஜித்தின் அதிரடியான ஆக்‌ஷன், டான்ஸ், காமெடி டைமிங், லுக் என அனைத்தையும் ரசிகர்கள் தியேட்டர்களில் ரசித்து பார்த்து கொண்டாடினர். ஓடிடியிலும் துணிவு திரைப்படம் உலகளவில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

எதிர்பார்க்காத ட்விஸ்ட்

எதிர்பார்க்காத ட்விஸ்ட்

சினிமா படங்களில் கூட வராத ட்விஸ்ட்டாக அஜித்தின் ஏகே 62 படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என ரொம்பவே நம்பிக் கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே ஷாக் ஆக்கியது. படம் ஃபிளாப் ஆனாலே இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கும் அஜித் ஏன் விக்னேஷ் சிவனுக்கு முதல் வாய்ப்பை கூட கொடுக்காமல் நிராகரித்தார் என்கிற கேள்வி எழுந்தது.

லைகாவின் முடிவா

லைகாவின் முடிவா

அஜித்தின் ஏகே 62 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் விஜய்யின் லியோ படத்துடன் மோத தரமான ஆக்‌ஷன் படத்தை கொடுக்கவே அதிரடியாக விக்னேஷ் சிவனை மாற்றி விட்டனர் என்றும் பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார் என்று இதுவரை லைகா நிறுவனம் அறிவிக்காத நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62வை தனது பயோவில் இருந்து நீக்கிய நிலையில், அந்த தகவல் உறுதியானது தான் என தெரிய வந்தது.

மகிழ் திருமேனி இயக்கத்தில்

மகிழ் திருமேனி இயக்கத்தில்

விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்றும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இந்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வெளிநாட்டில் டூர்

வெளிநாட்டில் டூர்

போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கு நடிகர் அஜித் சுற்றுலா செய்து வந்த நிலையில், அவரது புகைப்படங்களை மனைவி ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளன.

சென்னை திரும்பினார் அஜித்

சென்னை திரும்பினார் அஜித்

வெளிநாட்டில் டூர் அடித்து வந்த நடிகர் அஜித் தனது சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளதாக சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் சில ரசிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், தகவல்கள் கசிந்துள்ளன.

ஏகே 62 அறிவிப்பு விரைவில்

ஏகே 62 அறிவிப்பு விரைவில்

ஏகே 62 படத்தின் அறிவிப்பு காதலர் தினத்துக்காவது வரும் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போன அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித் சென்னை திரும்பி விட்டார் என்கிற செய்தி கேட்டதுமே, அப்போ ஏகே 62 அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சந்தோஷத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X