துணிவு அப்டேட்..நெகட்டிவ் ரோலில் அஜித்..இந்தியாவை அலறவிட்ட உண்மை கதை?
சென்னை : அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் கதை குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார்.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அசுரன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்றோர் படத்தில் கமிட்டாகி உள்ளனர்.

அஜித் 61
அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என்று கூறப்பட்டு வந்ததால், வங்கி போல செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பில் அஜித்
கடந்த 2 மாதங்களாக ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்டிருந்த அஜித் கடந்த வாரம் சென்னை திரும்பினார். சென்னையில் ஒரு வாரம் ஒய்வு எடுத்த நடிகர் அஜித்குமார், நேற்று முன் தினம் அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு புறப்பட்டு சென்றார்.

துணிவு
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 1987ம் ஆண்டு நடந்த வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த கொள்ளையர்கள் போலீசை போல உடையணிந்து வங்கி ஊழியர்களை மிரட்டி 6 கோடியை கொள்ளை அடித்து சென்றனர்.

நெகட்டிவ் ரோலில் அஜித்
1987ம் ஆண்டு நடந்த வங்கி கொள்ளையின் வழக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக நடந்து 2019ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 13 பேரில் 9 பேருக்கு தண்டனை வழங்கியது. பெரும் பரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர் லாப் சிங் தான். இந்த லாப் சிங் கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருவதால், இது மீண்டும் மங்காத்தா கதையான படத்தை காண ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











