Don't Miss!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Finance
தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?
- Automobiles
60 லட்சம் கிலோ எடையை இழுத்து கொண்டு அசால்டாக 120 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
- Lifestyle
இந்த 4 ராசிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ரொம்ப பிடித்த ராசிகளாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Technology
Gmail Tips- ஒரே க்ளிக்கில் மொத்த Inbox-ஐ டெலிட் செய்யலாம்!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை : நடிகர் அஜித் ரசிகர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜீத் குமார், எச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'AK61' படத்தில் இணைந்துள்ளார்.
ஏகே 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் பூனேவில் நடக்க உள்ளது. அதற்காக செட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அஜித்,
சிம்பு
மற்றும்
விஜய்
சேதுபதி
தான்
செட்
ஆவாங்க
–
தயாரிப்பாளர்
ஞானவேல்
ராஜா

அஜித் 61
நேர்கொண்ட பார்வை,வலிமை படத்தைத் தொடர்ந்து எச் வினோத் உடன் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை தற்காலிகமாக ‛அஜித் 61' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அஜித் 61 தள்ளிப்போகலாம்
அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் கூடுதல் காலமாகும் என்பதால் ஏற்கனவே திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நிறைவடையாது என்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு ரிலீஸ் என கூறப்பட்ட இந்த படம் டிசம்பருக்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு பயணம்
வலிமை திரைப்படத்தை முடித்த அஜித், கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார். இந்தியா கேட் முன்பு தேசிய கொடியை பிடித்த படி அவர் இருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபமான உலகை சுற்றி வரும் அஜித் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
|
ரசிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து
இந்நிலையில், நடிகர் அஜித் தன் ரசிகர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அஜித், ரசிகர் ஒருவருக்கு ஹேப்பி பர்த்டே வாழ்க்கையில சந்தோஷமா இருக்க வேண்டும் என பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் அஜித், மேலும், அந்த ரசிகரைப்பார்த்து நல்லஇருக்கீங்களா? என கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
|
டேட் கூட தெரியாதா?
மேலும் , அந்த வீடியோவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அஜித் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில் 10-10-22 என்று எழுதியுள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்றால் இன்றைய தேதியோ அல்லது 27-6-22 என்று தானே எழுதியிருக்க வேண்டும் என்றும், ஏன் டேட் கூட அஜித்திற்கு தெரியாதா, இல்லை அக்டோபர் மாத பிறந்த நாளுக்கு இப்போதே வாழ்த்து தெரிவித்து விட்டாரா என்றும் கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.