“லவ் யூ சார்“… ‘ஏகே 61' படப்பிடிப்பை முடித்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு!

சென்னை : எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ஏகே 61 படத்தில் ராஜதந்திரம் பட புகழ் வீரா ஒப்பமந்தமாகி நடித்து முடித்துள்ளார்.

படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ஏகே 61 என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

ஏகே61

ஏகே61

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் தனது 61வது படமாக இணைந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே61 தன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜீத் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்திற்காக அஜித் ஒரு சில கிலோவை குறைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல முன்னணி நட்சத்திரங்கள்

பல முன்னணி நட்சத்திரங்கள்

புனேவில் நடைபெறும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், நயனா சாய், மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார், அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் முந்தைய இரண்டு படங்களில் இருந்த பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர் இந்த படத்திலும் பணிபுரிகின்றனர்.

மகத்தான வெற்றிக்கு காரணம்

மகத்தான வெற்றிக்கு காரணம்

இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் நடிகர் வீரா முக்கிய கேரக்டரில் நடித்து இருந்த நிலையில் அவர் தனது பகுதியின் படப்பிடிப்பு முடித்து விட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். உங்களுடன் பழகியது ஒரு நல்ல அனுபவராக இருந்தது. அவரின் நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். பலவருட ரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவையே அவரை மகத்தான நட்சத்திரமாக மாற்றியுள்ளது.

லவ் யூ சார்

லவ் யூ சார்

அன்புள்ள ஏகே சார், நாம் மீண்டும் சந்திக்காமல் போனால் தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறீர்கள். நான் பழகிய நாட்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் இயல்பில் இருக்க விட்டீர்கள். நீங்கள் எப்போதும் வாழ்வில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம், உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் விருப்பமும் இதுவே. லவ் யூ சார் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X