Actor Ajith: ஆகஸ்ட்டில் துவங்கும் குட் பேட் அக்லி சூட்டிங்.. படத்தில் இணைந்த ஜெயிலர் பட நடிகர்!

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இதன் முதல் கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் அடுத்தடுத்த ஸ்டூடியோக்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இம்மாத இறுதியில் அஜித் இணையவுள்ளதாகவும் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து 35 நாட்கள் அசர்பைஜானில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சூட்டிங்கை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ரீலீலா, நஸ்லன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள சூழலில் ஜெயிலர் படம் மூலம் கவனம் பெற்ற தெலுங்கு நடிகர் ஒருவரும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Ajith kumar Good bad ugly movie Adhik Ravichandran Magizh thirumeni tamil cinema

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியான சூழலில் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக அவரது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த ஆண்டிலேயே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணைந்த நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் இம்மாத இறுதியில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஷெட்யூல் 35 நாட்கள் நீடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி சூட்டிங்: இதையடுத்து சில நாட்கள் பூனாவில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான செட் வேலைகள் சென்னையில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படக் குழுவினர் அடுத்தகட்ட சூட்டிங்கிற்காக ஜப்பான் பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த நடிகர்: இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் மலையாள நடிகர் நஸ்லனும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஜெயிலர், ஜப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சுனிலும் முக்கியமான கேரக்டரில் அஜித்துடன் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சுனில் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அஜித்திற்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்படுகிறது.

அஜித் ஜோடி குறித்து கேள்வி: படத்தில் ஸ்ரீலீலா இணைந்துள்ள சூழலில் அவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்பட்ள்ளது. இதனிடையே அஜித்தின் ஜோடி நடிகை குறித்து விரைவில் படக்குழுவினர் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த கேரக்டரில் மீனா, சிம்ரன், நயன்தாரா என அடுத்தடுத்த நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. படத்தில் 3 கேரக்டர்களில் அஜித் நடித்து வருகிறார். இதில் ஒரு கேரக்டர், நெகட்டிவ் ஷேடில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாறு படத்திற்கு பிறகு அஜித் 3 வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X