டாப் டக்கரா இருக்காரே.. இந்தியளவில் டிரெண்டாகும் அஜித்தின் ஐரோப்பா ட்ரிப் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
சென்னை: ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித் ஐரோப்பா முழுக்க சுற்றிப் பார்க்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் இப்படி அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகின்றன என ட்ரோல்கள் குவிந்த நிலையில், விஜய் பிறந்தநாள் முடிந்த பின்னரும் அஜித்தின் சுற்றுலா படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
#AjithKumar எனும் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் அஜித் ஐரோப்பாவில் பைக், கார், கப்பல் என செம ஜாலியாக டிராவல் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

200 கோடி வசூல்
நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வலிமை திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கமல்ஹாசனின் விக்ரம் படம் 400 கோடியை நெருங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் வலிமை தான் வசூலில் இதுவரை இரண்டாம் இடம் என்கின்றனர். பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வெளியாகாத நிலையில், அந்த படம் 200 கோடி வசூல் செய்ததா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை. விமர்சன ரீதியில் வலிமை சறுக்கினாலும் நல்ல வசூல் தான் என்கின்றனர்.

தள்ளிப் போகிறதா ஏகே61
தீபாவளிக்கு அஜித் குமாரின் ஏகே61 எதிர்பார்க்கலாம் என போனி கபூரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், தற்போது இன்னமும் படத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில், கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் உள்ளிட்ட இரு படங்கள் தீபாவளி பண்டிகையை பிடித்துக் கொண்டன. அதன் காரணமாக ஏகே61 படம் கட்டாயம் தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இன்னமும் போனி கபூர் இது தொடர்பான விளக்கத்தை அளிக்கவில்லை.

ஐரோப்பா புறப்பட்ட அஜித்
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் நடிகர் அஜித் வெளிநாடுகளில் பைக் சுற்றுலா சென்றார். இந்நிலையில், ஏகே61 படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையிலேயே ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். ஜூலை முதல் வாரத்தில் தான் புனேவில் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றே தெரிகிறது.

கார் அருகே கெத்தா
நடிகர் அஜித் பெட்ரோல் பங்கில் தனியாக பெட்ரோல் போடுவது, நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா செய்வது என ஏகப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், கார் அருகே நடிகர் அஜித் இருக்கும் ஒரு செம ராயல் லுக் புகைப்படமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஏகப்பட்ட க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











