அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

சென்னை : நடிகர் அஜித்தின் பணிவை பார்த்து பலமுறை நாம் வியந்து இருக்கிறோம். அப்படி ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி அஜித்தின் மீது மேலும் மரியாதையை வரவழைத்துள்ளது.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 29ந் தேதி முதல் 31ந் தேதி வரை நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்னர். இதில், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

4 தங்கம், 2 வெண்கலம்

4 தங்கம், 2 வெண்கலம்

நடிகர் அஜித்குமார் அணி சென்ட்ரல் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், ஸ்டாண்டார்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்க பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் அணி ஆண்கள் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் என 4 தங்கம் 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றார்.

கை அசைத்த அஜித்

கை அசைத்த அஜித்

அஜித்தை பார்க்க ரைபிள் கிளப் வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களை பார்க்க ரைபிள் கிளப் மொட்டை மாடிக்கு வந்த அஜித், அங்கு ஆயிரக்கணக்கில் கூடியிருந்தவர்களை பார்த்து கையசைத்து முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

அஜித் அழகான பண்பு

அஜித் அழகான பண்பு

இந்நிலையில், திருச்சி ரைபிள் கிளப் வந்திருந்த அஜித், அப்போது, சிலருடன் பேசி கொண்டு வருகிறார். அப்போது, அங்கிருந்த ஹவுஸ் கீப்பிங் பெண்கள் அஜித்தை பார்த்ததும் எதுவுமே பேசாமல் அந்த இடத்திலேயே அமைதியாக நின்று விட்டனர். இதைப்பார்த்த, அஜித் ஹவுஸ் கீப்பிங் பெண்களுக்கு வணக்கம் வைக்கின்றனர். அவர்களை கண்டதும் ஒரு நிமிடம் மிகவும் பண்புடன் சிரித்து விட்டு அவர்களிடம் மிகவும் பண்புடன் அஜித் நடந்து கொண்ட விதத்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஏகே 61

நடிகர் அஜித், இயக்குநர் எச்.வினோத்துடன் அஜித் தொடர்ந்து 3வது முறையாக ஏகே 61 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X