Actor Ajith: அஜித்தின் அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணி.. ஒரு முடிவோடத்தான் இருக்காரு!

சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது. விஜய்யின் வாரிசு படத்தோடு மோதி சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது.

Actor Ajith Line Up With Vetrimaran and Aadhik Ravichandran For his Next Movies

விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 2வது வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஹெச் வினோத்துடன் அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதம் துவங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 2வது வாரத்தில் சென்னையில் துவங்கப்பட உள்ளது.

விடாமுயற்சி படம்: தற்போது அசர்பைஜானிலிருந்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய ஏகே63 படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் அஜித்தின் மேனேஜர்.

வெற்றிமாறனுடன் கூட்டணி: இதனிடையே அஜித்தின் ஏகே64 படம் குறித்த தகவல்களும் தற்போது வெளியானவண்ணம் உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கான வேலைகளை விரைவில் வெற்றிமாறன் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது விடுதலை 2 படத்தின் சூட்டிங்கில் பிசியாகவுள்ள வெற்றிமாறன், அடுத்ததாக அஜித்தின் 64வது படத்திற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அஜித்திடம் ஓகே வாங்கிய வெற்றிமாறன்: இந்தப் படத்திற்காக அஜித்திடம் கதை சொல்லி வெற்றிமாறன் ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எல்ரெட் குமார் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவிருந்த நிலையில் அந்தப்படம் அவருக்கு கைநழுவிப் போனது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தை அவர் தயாரிக்கவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இளம் இயக்குநர்களுடன் அஜித்: ஒரே இயக்குநருடன் அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி படங்களை கொடுத்து வந்தார் அஜித். முன்னதாக சிவா, ஹெச் வினோத் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த அவர், தற்போது வித்தியாசமான மற்றும் இளம் இயக்குநர்களுடன் கைக்கோர்த்து வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துவரும் அஜித், அடுத்தடுத்த படங்களில் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் வெற்றி மாறன் கூட்டணியில் இணையவுள்ளார்.

சூர்யாவின் வாடிவாசல்?: இந்தப் படங்கள் அஜித்தின் கேரியரை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே விடுதலை 2 படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் அவர் தற்போது அஜித்தின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் அவர் அடுத்ததாக சூர்யா அல்லது அஜித் இவர்களில் யாருடன் இணைவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X