Ajith: ஸ்லிம் லுக்கில் ஸ்மார்ட் அஜித்.. விடாமுயற்சி படத்தில் காத்திருக்கும் சம்பவம்!
சென்னை: நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது துணிவு. வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இந்தப்படம் சிறப்பாக அமைந்தது.
இந்தப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி படம் உருவாகவுள்ளது. படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. ஆனால் தற்போதுவரை படத்தின் சூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அஜித்தின் ஸ்லிம் -ஸ்மார்ட் லுக்: நடிகர் அஜித் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவரது நடிப்பில் அடுத்தடுத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கியிருந்தார் ஹெச் வினோத். கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது துணிவு. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு வெளியானது. படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். சர்வதேச அளவில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது இந்தப் படம்.
துணிவு படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்கவிருந்தார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் மார்ச் மாதத்திலேயே துவங்கவுள்ளதாகவும் தீபாவளிக்கு படம் ரிலீசாகவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டார். அவர் விவரித்த கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
இதையடுத்து அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கி கமிட்டானார் மகிழ் திருமேனி. இந்தப்படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி என்று இந்தப் படத்தின் டைட்டில் அமைந்த நிலையில், படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. படத்தின் சூட்டிங்கிற்காக இயக்குநர் மகிழ் திருமேனி போலவே ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நார்வேயில் அஜித் உள்ளதாக கூறப்பட்டது. தனிப்பட்ட முறையில் அஜித்தின் பைக் பயணங்கள் ஒவ்வொரு இடத்தில் நடந்து வருகிறது. ஆனால் ஒரு நடிகராக அவர் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும், ஒரே மூச்சாக 100 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டு படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலாவது கண்டிப்பாக நடக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக வெளியாகி வருகிறது. உடல் எடையை அஜித் சிறப்பாக குறைத்து ஸ்மார்ட்டாகியுள்ளார். அவரது பழைய கெட்டப்பில் தொப்பை, தொந்தியில்லாமல் ஸ்மார்ட் லுக்கில் அஜித்தை பார்க்கும் ரசிகர்கள், வாலி படத்தில் இருந்ததை போல அவர் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில் அஜித்தின் நிழல் உருவப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அஜித்தின் நிழல் மட்டுமே போதும் என்றும் அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிழல் புகைப்படத்தில் அஜித் மற்றொரு நபருடன் காணப்படுகிறார். இந்தப் புகைப்படத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











