சென்னை திரும்பிய அஜித்.. விரைவில் ஏகே61 பட சூட்டிங்கிற்காக பாங்காக் பயணம்!
சென்னை : நடிகர் அஜித் தற்போது ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்மூலம் ஹெச் வினோத் -போனிகபூருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் பாங்காக்கில் சூட்டிங் துவங்கவுள்ளது.
இந்த சூட்டிங்கில் அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர். அங்கு 3 வாரங்கள் சூட்டிங் நடைபெறவுள்ளது.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட்தான். 30 ஆண்டுகளை கடந்து தன்னுடைய சினிமா கேரியரில் இவர் பயணம் செய்து வந்தாலும் தன்னுடைய குணத்தில், பழகும் தன்மையில் எந்தவிதமான மாறுபாடும் இல்லாமல் தொடர்ந்து ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு வருகிறார்.

மஞ்சு வாரியர் பாராட்டு
சமீபத்தில் அஜித் குறித்து பேசிய ஏகே61 படத்தின் நாயகி மஞ்சு வாரியர், அவர் செட்டில் அனைவரிடமும் ஒரே மாதிரிதான் பழகுவார் என்றும் அவர் செட்டில் இல்லையென்றாலும் அவரை அனைவரும் பாராட்டி பேசுவதை தான் பார்த்ததாகவும் இந்த அவரது குணம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

3வது முறையாக கூட்டணி
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் அஜித். இந்தப் படத்தை 3வது முறையாக தயாரித்து வருகிறார் போனி கபூர். இந்நிலையில் இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாகத்தான் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன், லடாக் பயணம்
இதை தொடர்ந்தே படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் பிரிட்டன், லடாக் போன்ற இடங்களுக்கு அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக லடாக் பத்ரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவந்த அஜித் நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளார்.

பாங்காக் சூட்டிங்
ஏகே61 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் பாங்காக்கில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த சூட்டிங்கில் அஜித் விரைவில் கலந்துக் கொள்ளவுள்ளார். பாங்காக்கில் இந்தப் படத்தின் சூட்டிங் மூன்று வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











