Ajithkumar: சென்னை திரும்பிய அஜித்.. விரைவில் அபுதாபி செல்லும் விடாமுயற்சி டீம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியானது.

இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போயுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தை அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajith returns chennai after his bike tour and going to join Vidaamuyarchi movie shooting

சென்னை திரும்பிய நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அவரது பிறந்தநாளையொட்டி வெளியானது. அது முதல் இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதோ அதோ என்று 5 மாதங்களை எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் இந்தப் படக்குழுவினர் கடந்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துபாயில் துவங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்க கமிட்டாகியுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்திருந்த ஹுமா குரோஷியும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ள போதிலும், அஜித்திற்கு ஜோடியாக இவர்கள் நடிக்கவில்லை என்றும் அதனால் இவர்கள் அஜித்துடன் ரொமான்ஸ் செய்ய மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் படத்தின் சூட்டிங் துபாயில் துவங்கவுள்ளதாகவும் ஒரேகட்டமாக படத்தின் சூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய பைக் டூரையொட்டி கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் இருந்த அஜித், தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி டீம் விரைவில் படத்தின் சூட்டிங்கிற்காக அபுதாபி செல்லவுள்ளதாகவும் அந்த ட்ரிப்பில் அஜித்துடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில தினங்களில் இந்த டீம் தங்களுடைய வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சூட்டிங் குறித்து லைகா அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது. பொங்கலையொட்டி வெளியான இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இயக்குநர் ஹெச் வினோத் கைவண்ணத்தில் வெளியான இந்தப் படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய வசூலை குவித்த படமாக மாறியுள்ளது விஜய் -அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியான போதிலும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X