கிறிஸ்துமஸ் ரேசில் தனுஷ் -சிம்பு படங்கள்.. அஜித் படம் எப்ப வெளியாகும்.. ஏக்கத்தில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே61 படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

இந்தப் படம் பொங்கலுக்கு விஜய் படத்துடன் மோதவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் படத்தின் டைட்டில் கூட வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அஜித்தின் ஏகே61 படம்

அஜித்தின் ஏகே61 படம்

நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்டமாக பூனாவில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூட்டிங் பாங்காக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் படக்குழு பாங்காக் செல்லவுள்ளனர்.

3வது முறையாக கூட்டணி

3வது முறையாக கூட்டணி

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஏகே61 படத்தை இயக்கி வருகிறார் ஹெச் வினோத். பேங்க் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகிவரும் நிலையில், ஐதராபாத்தில் இதற்கான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்டுகள் பிரம்மாண்டமாக போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டன.

தள்ளிப் போன சூட்டிங்

தள்ளிப் போன சூட்டிங்

இதையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. கிடைத்த கேப்பில் பிரிட்டனுக்கு பயணமானார் அஜித். தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடந்த நிலையில், இதை தொடர்ந்து லடாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தனது சர்வதேச பைக் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

பாங்காக்கில் சூட்டிங்

பாங்காக்கில் சூட்டிங்

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ள அஜித், இந்தப்படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் பாங்காக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அஜித் உள்ளிட்ட படக்குழு பாங்காக் செல்லவுள்ளது. அங்கு 3 வாரங்களுக்கு சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ் -சிம்பு படங்கள் ரிலீஸ்

தனுஷ் -சிம்பு படங்கள் ரிலீஸ்

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் அல்லது பொங்கல் ரிலீசாக வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகின. வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமசையொட்டி தனுஷின் வாத்தி மற்றும் சிம்புவின் பத்து தல படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் மனஉளைச்சல்

அஜித் ரசிகர்கள் மனஉளைச்சல்

ஆனால் நீண்ட காலங்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வரும் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் மற்றும் ரிலீஸ் தாமதமாவது அஜித் ரசிகர்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக வலிமை படமும் இதேபோல 2 ஆண்டுகள் கழித்து ரிலீசானது. இந்நிலையில் அதேபோல ஏகே 61 படமும் வெளியீட்டில் தாமமாகி வருகிறது.

நிதி நெருக்கடியால் சூட்டிங் தாமதம்?

நிதி நெருக்கடியால் சூட்டிங் தாமதம்?

இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாகவே ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விஜய் படத்தின் வாரிசை போல, இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் சிறப்பாக நடந்தால், அதைக்கொண்டு படத்தை முடித்துவிடலாம் என்று போனி கபூர் திட்டமிட்டு வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X