இன்னும் சில தினங்களில் துவங்கும் ஏகே61... மார்ச் 9ல் பூஜை... சூப்பர் அப்டேட் இதோ!

சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்தப் படம் ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டியுள்ளது.

இந்நிலையில் அஜித் 61 படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது.

நடிகர் அஜித்தின் வலிமை

நடிகர் அஜித்தின் வலிமை

நடிகர் அஜித் தன்னுடைய திரைப்படங்கள் மூலமாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் ஹீரோவாகவே தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது நேர்கொண்ட பார்வை படத்தின் வெளியீட்டையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது அடுத்த படம் வலிமை தற்போது ரிலீசாகியுள்ளது.

சூப்பர் வசூல்

சூப்பர் வசூல்

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் ஒரே வாரத்தில் உலகளில் வசூல்வேட்டை நடத்தி 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. அதிகப்படியான பைக் காட்சிகள், ஓவர் சென்டிமெண்ட் என்று பலதரப்பட்ட விமர்சனங்களை இந்தப்படம் பெற்றுள்ளது.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

ஆயினும் தற்போது எச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக தனது ஏகே 61 படத்திற்காக இணையவுள்ளார் அஜித். இதுகுறித்த அறிவிப்பு வலிமை படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே வெளியானது. மார்ச் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச்சில் துவக்கம்

மார்ச்சில் துவக்கம்

இந்நிலையில் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தில் அஜித்தின் லுக்கை நிழல்படமாக வெளியிட்டிருந்தார் போனிகபூர். படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் அஜித் இரட்டை கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் லுக்

அஜித் லுக்

சமீபத்தில் வெளியான அஜித்தின் குடும்ப படத்திலும் அஜித் இந்த நிழல்படத்தையொட்டிய கெட்டப்பில் காணப்பட்டது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கண்ணில் கூலர்சுடன் நீண்ட தாடியுடன், காதில் கடுக்கன் என ஸ்டாலாக இந்தப் படங்களில் காணப்படுகிறார் அஜித். தன்னுடைய வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே இந்தப் படங்களில் அவர் காணப்படுகிறார்.

9ம் தேதி ஏகே61 பூஜை

9ம் தேதி ஏகே61 பூஜை

இதனிடையே வரும் 9ம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரம்மாண்டமான அளவில் போடப்பட உள்ளதாகவும் 19ம் தேதி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் படத்தின் டைட்டிலும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட அளவில் செட் போடப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

ஐதராபாத்தில் சென்னை

ஐதராபாத்தில் சென்னை

சென்னை மவுண்ட் ரோட்டை ஐதராபாத்தில் பிரம்மாண்ட அளவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்கான வேலைகள் தற்போது ஜரூராக நடைபெற்று வருகிறது. வலிமை படம் ஒரு பக்கத்தில் வசூல்மழை பொழிந்துவரும் நிலையில், அடுத்த படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

Recommended Video

ஜூனியர் ஏகே-வின் 7வது பிறந்த நாள்: குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்.... வைரலாகும் புகைப்படங்கள்!
விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

வலிமை படத்தை போல இல்லாமல் ஏகே 61 படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து வரும் தீபாவளி ஸ்பெஷலாக படத்தை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X