மார்ச் முதல் வாரத்தில் சூட்டிங் துவங்கும் ஏகே62 படம்.. விரைவில் அறிவிப்பு!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியை அடுத்து ஏகே62 படத்திற்கான அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், நாடு திரும்பியுள்ள நிலையில், விரைவில் இதன் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. த்ரில்லர் ஜானரில் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் துணிவு படத்தில் இணைந்திருந்தார்.

துணிவு படம்
படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. மேலும் கடந்த 8ம் தேதி படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஓடிடியில் வெளியான துணிவு படம்
நெட்பிளிக்சில் வெளியான துணிவு படம், முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிலும் தனது வெற்றியை வெளிப்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தின் வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

மகிழ்திருமேனி இயக்கும் ஏகே62 படம்
ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், விக்னேஷ் சிவன், ஏகே62 படத்திலிருந்து விலகினார். இதையடுத்து படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இவர் அருண் விஜய்யின் கேரியர் பெஸ்ட் படங்களான தடம், தடையறத்தாக்க போன்ற படங்களை இயக்கிய நிலையில், ஏகே62 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விரைவில் அறிவிப்பு
ஆனால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புத் தரப்பு இன்னும் வெளியிடாமல் உள்ளது. இதனிடையே இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும், படத்தின் சூட்டிங், ஜூன் -ஜூலை மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அஜித்தின் சர்வதேச பைக் டூர்
ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, சர்வதேச அளவில் தன்னுடைய பைக் சுற்றுப்பயணத்தை நடிகர் அஜித் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கென படத்தின் ரிலீசையடுத்து ஒரு ஆண்டிற்கு தனது சுற்றுப்பயணத்தை அஜித் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











