Ajith :என்னது அஜித் பட டைட்டில் இதுவா.. ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யாத தலைப்பு!

சென்னை : நடிகர் அஜித்குமாரின் ஏகே62 படத்தின் டைட்டில் இன்று மாலை அல்லது நாளைய தினம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய தினம் அஜித்குமார் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அவரது அடுத்தப்படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது.

தற்போது நேபாளம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித், நாளைய தினம் பூடானில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajiths AK62 movie title said to be announced today and the title is Vidamuyarchi?

அஜித் பட டைட்டில் விடாமுயற்சி? : நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் வசூல்ரீதியாக இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில் படம் தயாரிப்பாளருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. படம் 300 கோடிகளை தாண்டி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தின்மூலம் இணைந்திருந்தது.

வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திலிருந்து கடந்த ஜனவரி மாதத்தில் அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி அஜித் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் பிறந்தநாளையொட்டி இன்று மாலையோ அல்லது நாளையோ படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியானால், மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Actor Ajiths AK62 movie title said to be announced today and the title is Vidamuyarchi?

தற்போது நேபாளம், சிக்கிமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அஜித். தன்னுடைய பைக்கில் ரைட் செய்வதும், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுமாக உள்ளார். இதனிடையே நாளைய தினம் தன்னுடைய பிறந்தநாளில் அவர் பூடானில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் இரு தினங்களுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டனர். மாஷ்அப் வீடியோக்கள், காமன் டிபிக்கள் என ட்விட்டர் பக்கம் தெறிக்கவிடப்பட்டுள்ளது. மேலும் ஏகே52 மற்றும் ஏகே62 ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன.

இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள அஜித் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. அஜித் படத்திற்கு விடா முயற்சி என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. இந்த தலைப்பு அஜித் படத்திற்கு தகுந்த தலைப்புதான் என்றாலும், படத்தின் தலைப்பு கேட்சியாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் இந்த தலைப்பு கண்டிப்பாக அஜித் படத்தின் தலைப்பாக இருக்கக்கூடாது என்பதே அவர்களது எதிர்பார்ப்பு.

ஏற்கனவே துணிவு படத்தின் தலைப்பு வெளியானபோது, இதே போன்ற கருத்தைத்தான் ரசிகர்கள் வெளிப்படுத்தினர். அஜித் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இல்லை என்று கருத்து வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி என்ற தலைப்பிற்கும் அதேபோன்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இந்த தலைப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், இந்த தலைப்பு கண்டிப்பாக ஏகே62 படத்தின் தலைப்பாக இருக்கக்கூடாது என்பதே அவர்களின் பிரார்த்தனை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X