#மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
மீ டூ விவகாரம் குறித்து நடிகர் அஜித் தன்னிடம் ஏற்கனவே கூறியதாக நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
சென்னை: மீ டூ பற்றி நடிகர் அஜித் என்ன கூறினார் என்பது பற்றி மனம் திறந்துள்ளார் நடிகை மதுமிதா.
இந்திய திரையுலகையே உலுக்கி வருகிறது 'மீ டூ' இயக்கம். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் சொல்லி இந்தி பட உலகை அதிர வைத்தார். தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்களின் தலைகள் மீ டூ வில் உருண்டன. தமிழில் பாடகி சின்மயி, பிரபல கவிஞர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொது இடங்களில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் எல்லோரிடமும் இது பற்றிய கேள்வியே பிரதானமாக உள்ளது. மீ டூ குறித்து அவர்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீ டூ பற்றி அஜித்:
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு சகநடிகைகளுடன் அதிகம் கிசுகிசுக்கப் படாதவரான அஜித்தும் மீ டூ பற்றி பேசிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. விஸ்வாசம் படப்பிடிப்பின் போது அவர் இது பற்றி பேசியுள்ளார்.

சமையல் பேச்சு:
காமெடி நடிகை மதுமிதாவிடம் தான் இது பற்றி அஜித் பேசி இருக்கிறார். அஜித் பிரியாணி செய்வதில் வல்லவர் என்பது ஊரறிந்த விசயம். இதனால் பெரும்பாலும், அஜித்திடம் அவர் சமையல் பற்றித் தான் அதிகம் பேசுவாராம்.

பிரச்சினைகள் குறையும்:
அப்படி ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, அஜித் மீ டூ இயக்கம் பற்றி பேசியுள்ளார். ‘ஹாலிவுட்டில் மீடூனு ஒரு விஷயம் இருக்கு. அது தமிழ் சினிமாவிலும் நடந்தால், நிறைய பாலியல் பிரச்னைகள் குறையும்'னு என அவர் கூறியுள்ளார்.

வெயிட் அண்ட் ஸீ:
அஜித் அப்போது கூறியது போலவே, தற்போது தமிழில் மீ டூ பூதாகரப் பிரச்சினை ஆகியுள்ளது. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் பாலியல் பிரச்சினைகள் குறைந்துள்ளதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொங்கல் ரிலீஸ்:
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்‘. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், `ஓகே ஓகே' மதுமிதா, கலைராணி என பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











