twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #HBDThalaAJITH: வாலி டூ மங்காத்தா.. அவார்டுகளை அள்ளிய தல அஜித்தின் ஐந்து படங்கள்!! #AjithKumar

    |

    சென்னை: விருதுகளை அள்ளிய நடிகர் அஜித்தின் 5 அட்டகாசமான படங்கள் குறித்து ஓர் பார்வை..

    Recommended Video

    தல அஜித் குமார் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள்

    ரசிகர்களால் "தல" என்று அழைக்கப்படும் மாஸ் நடிகர் அஜித். அஜித் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    அதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் மூலம் சமூக வலைதளங்களை திணறவிட்டு வருகின்றனர்.

    அஜித் பிறந்தநாளில் விஜய் ஃபேன்ஸ் செய்த வேலை.. திகைத்த டிவிட்டர்.. அசத்திட்டீங்க போங்க! #NanbarAjithஅஜித் பிறந்தநாளில் விஜய் ஃபேன்ஸ் செய்த வேலை.. திகைத்த டிவிட்டர்.. அசத்திட்டீங்க போங்க! #NanbarAjith

    இந்திய அளவில்..

    இந்திய அளவில்..

    அவரது ஈர்க்கக்கூடிய செயல்திறன் மற்றும் திரைக்கு அப்பாற்பட்ட ஆளுமையின் மூலம், நடிகர் அஜித் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையின் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த காலங்களில் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்ததன் மூலம் தல அஜித் இந்திய அளவிலான நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்துள்ளார்.

    வாலி டூ மங்காத்தா

    வாலி டூ மங்காத்தா

    நடிகர் அஜித் ஒருபோதும் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதில்லை, எப்போதும் அவர்களுக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். அந்த திறமையான நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் விருது பெற்ற அவரின் ‘வாலி' முதல் ‘மங்கத்தா' வரையிலான ஐந்து படங்களை காணலாம்.

    வாலி திரைப்படம்

    வாலி திரைப்படம்

    1999 ஆம் ஆஷ்டு வெளிவந்த வாலி திரைப்படம். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்த 'வாலி' படத்தில் அஜித் மற்றும் சிம்ரன் லீடிங் ரோலில் நடித்திருப்பார்கள். அஜித் இரட்டை சகோதரர்களாக இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படத்தில் மூத்த சகோதரர் அஜித் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உடையவராக இருப்பார். அவர் தனது தம்பி மனைவியை அடைய துடிக்கும் ஒரு ஆணாக நடித்திருப்பார். நடிகர் அஜித் நடிப்பில் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் நடித்ததற்காக அஜித் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

    பூவெல்லாம் உன் வாசம்

    பூவெல்லாம் உன் வாசம்

    அடுத்து 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த பூவெல்லாம் உன்வாசம் திரைப்படம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இந்தப் படத்தில், அஜித் மற்றும் ஜோதிகா அருகருகே வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைப் பருவ நண்பர்களாக நடித்து இருப்பார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலிப்பார்கள். எழில் இயக்கிய இப்படம் அஜித்தை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தது. இந்த படத்தில் நடித்ததற்காக அஜித்துக்கு தமிழக அரசு ஸ்பெஷல் விருதை வழங்கியது.

    வில்லன் படம்

    வில்லன் படம்

    அடுத்து 2002ஆம் ஆண்டு வெளியான வில்லன் படம். இந்தப் படத்திலும் அஜித் இரட்டை வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கேஎஸ் ரவிகுமார், அஜித் கூட்டணியில் இப்படம் உருவானது. இதில் கிரண் மற்றும் மீனா ஃபீமேல் லிடிங் ரோலில் நடித்திருப்பார். இதில் ஒரு அஜித் பஸ் கண்டக்டராகவும் மற்றொரு அஜித் மாற்றுத்திறனாளியாகவும் நடித்திருப்பார். மாற்றுத் திறனாளிக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பை ஆதரிப்பதற்காக பஸ் கண்டக்டர்அஜித், ஊழல்வாதிகளிடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பார். படத்தில் அஜித் காட்டிய வித்தியாசம் மிகவும் பாராட்டப்பட்டது. மேலும் இப்படத்திற்காக 'வாலி' படத்திற்குப் பிறகு சிறந்த நடிகருக்கான இரண்டாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார் அஜித்.

    வரலாறு

    வரலாறு

    அடுத்து 2006ஆம் ஆண்டு வெளி வந்த வரலாறு திரைப்படம். 2002 ஆம் ஆண்டில் 'வில்லன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு, அஜித் மீண்டும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்த படம் வரலாறு. இதில் அஜித் ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களாக மூன்று வேடங்களில் நடித்தார். அஜித் தனது நடிப்புக்கு அதிக மெனக்கெட்டு மூன்று வேடங்களிலும் வித்தியாசத்தை காட்டினார். மூன்று கேரக்டர்களாக நடித்த அஜித்துக்கு பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசின் சிறப்பு விருதும் கிடைத்தது. என்.ஐ.சி ஆர்ட்ஸ் தயாரித்த இப்படம் பெரும் பார்த்த திரைப்படமாக கருதப்பட்டது. இந்தப் படம் பட்ஜெட்டை விட நான்கு மடங்கு வசூலித்ததாக கூறப்பட்டது.

    மங்காத்தா

    மங்காத்தா

    அடுத்து 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படம். 'மங்கத்தா' படம் தல அஜித்தின் என்டெர்டெயினிங் படம், அதைவிட முக்கியமாக மங்காத்தா அவரது 50 வது படம். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் அஜித் இணைந்த முதல் படமும் ஆகும். மேலும் இது அஜித்தின் மிகவும் விரும்பப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. திருப்பங்கள் நிறைந்த இப்படம் ஆக்‌ஷன், த்ரில்லர் அனைத்து மையங்களிலிருந்தும் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக இருந்தது. அஜித் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சென்னை டைம்ஸ் திரைப்பட விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Ajith's five films which won awards from Vaali to Mankatha. Ajith celebrates his 49th birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X