நீண்ட காலங்களுக்கு பிறகு அஜித் செய்த விஷயம்.. ரசிகர்கள் சூப்பர் எக்சைட்டிங்!

சென்னை : நடிகர் அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் களமிறங்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டில், போஸ்டர்கள் சூட்டிங் துவங்கப்பட்டு 164 நாட்கள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

படத்தின் சூட்டிங் தற்போது பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் விஜய் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களின் ரசனையை மனதில் வைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் 3வது படத்தில் இணைந்துள்ளார். இந்த மூன்று படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

3வது முறையாக கூட்டணி

3வது முறையாக கூட்டணி

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து போனிகபூர் -ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக துணிவு படத்திற்காக அஜித் தற்போது இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படக்குழு பாங்காக் சென்றுள்ளது.

பாங்காக்கில் சூட்டிங்

பாங்காக்கில் சூட்டிங்


இந்த சூட்டிங்கில் படத்தின் நாயகி மஞ்சு வாரியர், ஜான் விஜய் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். வட இந்தியாவில் நடந்த பேங்க் கொள்ளையை மையமான கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இன்று, மூளையை மட்டுமே பயன்படுத்தி இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு வேடங்களில் அஜித்

இரண்டு வேடங்களில் அஜித்

இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற சூட்டிங்கில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோடிற்கான பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ளதான கூறப்படும் நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணியை தீவிரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகமான புகைப்படங்கள்

அதிகமான புகைப்படங்கள்

இந்தப் படத்தின் சூட்டிங்கின்போதும், இடையில் விசிட்டடித்த பிரிட்டன், லடாக் பயணங்களின்போதும் அஜித் அதிகமான ரசிகர்களை சந்தித்தார். அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். அவரது பைக் ரேசிங் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின.

அஜித் நடவடிக்கைகளில் மாற்றம்

அஜித் நடவடிக்கைகளில் மாற்றம்

இதுபோன்று எப்போதும் தன்னுடைய புகைப்படங்கள் வெளியாகாமல் அவர் பார்த்துக் கொள்வார். ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் தவிர்த்து விடுவார். படத்தின் பிரமோஷன்கள் உள்ளிட்டவற்றிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வாரயிதழுக்கு அஜித் பேட்டி

வாரயிதழுக்கு அஜித் பேட்டி

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கடந்த சில ஆண்டுகளாக பேட்டி கொடுப்பதை தவிர்த்துவந்த அஜித், தற்போது பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் தன்னுடைய மனவலிமை, பைக் பயணங்கள், தன்னுடைய படங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X