விமானநிலையத்தில் அடுத்தடுத்த கிளிக்ஸ்.. அஜித்தோட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சென்னை : நடிகர் அஜித் தன்னுடைய துணிவு படத்தின் சூட்டிங்கை முடித்து விட்டு டப்பிங் பணிகளில் பிசியாகியுள்ளார்.

பொங்கலையொட்டி துணிவு படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

விஜய்யின் வாரிசு படத்துடன் பொங்கல் பண்டிகையையொட்டி துணிவு படம் மோதவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அவரது வலிமை படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் வசூலில் சாதிக்க தவறவில்லை.

ஹெச் வினோத்துடன் கூட்டணி

ஹெச் வினோத்துடன் கூட்டணி

இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் இணைந்துள்ளார் அஜித். கடந்த இரு படங்களும் அஜித்திற்கு கைக்கொடுக்காத நிலையில் இந்தப் படத்தில் வலிமையான ஸ்கிரிப்ட்டுடன் ஹெச் வினோத் களமிறங்கியுள்ளார்.

மிரட்டலான கதைக்களம்

மிரட்டலான கதைக்களம்

படத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் நடந்த வங்கிக் கொள்ளையை கதைக்களமாக கொண்டுள்ளார் ஹெச் வினோத். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கும் கட்டாயத்தில் மிகுந்த மெனக்கெடலுடன் ஸ்கிரிப்ட் வொர்க்கை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டப்பிங் பணிகளில் அஜித் மும்முரம்

டப்பிங் பணிகளில் அஜித் மும்முரம்

இதனிடையே படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாகியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளில் அஜித் உள்ளிட்ட நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். படத்தில் மஞ்சு வாரியர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், அவரும் டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள்

அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள்

எப்போதும் விளம்பரங்களில் அதிகமாக ஈடுபடக்கூடாது என்ற கொள்கையுடன் இருப்பவர் அஜித். படத்தின் பிரமோஷன்களிலும் அவரை பார்க்க முடியாது. இதனிடையே சமீப காலங்களில் அவரின் அதிகமான படங்கள், தனியாகவும், பைக் ரைடின்போது போதும், ரசிகர்களுடனும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விமானநிலையத்தில் அஜித்

விமானநிலையத்தில் அஜித்


இதனிடையே சென்னை விமான நிலையில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக அவர் தனது மனைவி ஷாலினியுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X